மதுப்பிரியரான கணவரை மிஸ்டர் கேரளாவாக மாற்றிய மனைவி !

0

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் சோட்டானிக்கரை பகுதியைச் சேர்ந்த பொன்னப்பன் - ஜெயலட்சுமி தம்பதியின் மகன் சிவகுமார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே பெயின்டிங் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் சிவக்குமார். 

மதுப்பிரியரான கணவரை மிஸ்டர் கேரளாவாக மாற்றிய மனைவி !
வேலை முடிந்து தினக்கூலியாக கிடைக்கும் சம்பளத்தில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதற்கிடையே, தனது பகுதியில் வசிக்கும் அபர்ணா என்ற பெண்ணை காதலித்து 2007-ல் திருமணம் செய்து கொண்டார்.

தினமும் பெயின்டிங் வேலைக்குச் செல்லும் சிவகுமார், மாலையில் ஒரு ஃபுல் பாட்டில் மது குடித்து விட்டுத் தான் வீடு திரும்புவார். வேலை செய்யும் பணம் முழுவதும் குடித்தே அழித்ததுடன் தன் உடல் நலனையும் கெடுத்துக் கொண்டார். 

சிவகுமாரின் மதுப்பழக்கத்தால் வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டது. அவரது மது அடிமை நிலை எல்லை மீறிப்போனதை அடுத்து, சிவகுமாரை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும்படி அபர்ணாவுக்கு உறவினர்கள் ஆலோசனை வழங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் என்ன நடக்கிறது?

ஆனால், மனதுக்குள் வேறு முடிவு எடுத்த அபர்ணா, 2013-ம் ஆண்டு எருவேலியில் உள்ள ஜிம்மில் சிவகுமாரை வற்புறுத்திச் சேர்த்து விட்டார்.

பெயின்டிங் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் ஜிம்முக்கு செல்லத் தொடங்கினார் சிவகுமார். கொஞ்சம் நாள் ஜிம்முக்கு சென்றவர், பின்னர் பழையபடி மது குடித்து விட்டு ஜிம்முக்கு போகத்தொடங்கினார். 

இதையடுத்து, ஜிம்மில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், மனம் தளராத அபர்ணா தனது தாலிச் செயினை அடகு வைத்து 50,000 ரூபாய் பெற்று ஜோபி ஆசானின் பட்டறையில் கணவன் சிவகுமாரை சேர்த்தார். 

ஜோபி ஆசானின் வழிகாட்டுதல்படி உணவு முறையை மாற்றினார் சிவகுமார். பெயின்டிங் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு ஜிம்முக்கு செல்லும் சிவகுமார் இரவு 9 மணிக்கு வீடு திரும்பி வந்தார். 

ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டதால் குடியை அடியோடு மறந்தே விட்டார் சிவகுமார். இந்நிலையில், 2023 ஜனவரி மாதம் மிஸ்டர் எர்ணாகுளமாக தேர்வானார் சிவகுமார். 

அடுத்து, வயநாட்டில் நடந்த மிஸ்டர் கேரளா போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் முதலாம் இடம் பிடித்தார். கடந்த பிப்ரவரி மாதம் கண்ணூரில் நடந்த சீனியர்ஸ் பிரிவில் மிஸ்டர் கேரளா சாம்பியன் பட்டம் வென்றார்.

வரும் ஜூலை மாதம் நடக்க உள்ள மிஸ்டர் இந்தியா சாம்பியன்ஷிப்பை வெல்வதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சிவகுமார். 

10 முட்டைகளின் வெள்ளைப்பகுதி, அவித்த வாழைப்பழங்கள், மூன்று வேளைகளும் தலா 100 கிராம் சிக்கன், தூங்கப் போவதற்கு முன் இரண்டு ஆப்பிள், 2 வெள்ளரிக்காய் என உணவு முறையை வகுத்துள்ளார் சிவகுமார்.
இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் தர முன் வந்ததா?

தான் மிஸ்டர் கேரளா பட்டத்தை வென்றதற்கு தன் மனைவிதான் முழு காரணம் என்று, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகுமார்.

ஒருவரின் கெட்ட பழக்கத்தை மாற்ற வேண்டுமானால், நல்ல வழக்கங்களின் பலனை அனுபவிக்க வைத்தாலே போதும். - இது அபர்ணாவின் மெசேஜ்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings