பூமியுடைய வயது 445 கோடி ஆண்டு... எப்படி கண்டுபிடிக்கிறாங்க தெரியுமா?

0

நம் பூமி தோன்றி 455 கோடி ஆண்டுகள் ஆகின்றன; ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மூத்த மலைத் தொடரைப் பார்பெர்டன் (Barberton Mountains)  என அழைக்கின்றனர். இதன் வயது 350 கோடி ஆண்டுகள். 

பூமியுடைய வயது 445 கோடி ஆண்டு... எப்படி கண்டுபிடிக்கிறாங்க தெரியுமா?
இமயமலை 4-5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. மேற்குத் தொடர்ச்சி மலை 6.6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிந்துசமவெளி நாகரிகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

இதெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படிப்பவை. சரி, இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள், கோடிக்கணக்கான ஆண்டுகள் பழைமையானவை என்று எப்படி கண்டறிகின்றனர்? இத்தகைய கேள்வி, சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

தொன்மையான பொருள்கள், உயிரினங்களின் படிமங்கள் ஆகியவற்றின் வயதினை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்...

நம்மைச் சுற்றி உள்ள நீர், காற்று, மண், தூசு என அனைத்தும் அணுக்களால் ஆனவை. மேலும் அணுக்களே மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும்  உருவாக்கியுள்ளன. 

இந்த அணுக்களின்றி எதுவும் இல்லை. நுண்ணிய துகள்களான எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்களே வகை வகையான அணுக்களை உருவாக்குகின்றன.‌ இதுவரை 118 வகையான அணுக்களைக் கண்டறிந்துள்ளனர். 

லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?

ஓர் அணுவில் உள்ள நியூட்ரானின் எண்ணிக்கையை மாற்றினால் கிடைப்பது ஐசோடோப்பு. இயற்கையாகவும் இது உருவாகிறது. மருத்துவ பயன்பாட்டிற்காகச் செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்த ஐசோடாப்புகள் கதிரியக்கத்தை உமிழ்பவை. மீன்கள் தண்ணீருக்குள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டல வாயுக்களுக்குள் நாம் வாழ்கிறோம். 

நம் வளிமண்டலம் 78% நைட்ரஜனையுமும்,  21% ஆக்சிஜனையும்,  0.04% கரியமில வாயுவையும் மற்ற பிற வாயுக்களையும் கொண்டது. பிரபஞ்சத்திலிருந்து வரும் சக்திமிக்க கதிர்வீச்சுகள் நம் வளிமண்டல வாயுக்கள்மேல் மோதுகின்றன. 

அதனால் சக்திமிக்க நியூட்ரான்கள் உற்பத்தியாகிறன. இந்த நியூட்ரான்கள் நைட்ரஜன் அணுக்கள் மேல் மோதுகின்றன. 

இதனால் நைட்ரஜன் தன்னிடம் உள்ள ஒரு புரோட்டானை இழந்து கார்பன்-14 என்ற ஐசோடோப்பு உருவாகிறது என 1934ஆம் ஆண்டு  வில்லாடு லிப்பி (Willard Libby) என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார்.

இது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன்-14 அணுவைக் கொண்ட கரியமில வாயுவை உண்டு பண்ணுகிறது.‌ நம் வளிமண்டலத்தில் உள்ள மொத்த கரியமில வாயுவில் இது வெறும் 0.1 விழுக்காடுதான் உள்ளது.

கரியமில வாயுவை உட்கொண்டு தான் தாவரங்கள் குளுக்கோஸ் தயாரிக்கிறது. இந்தக் குளுக்கோஸ் தாவரத்தின் உடலெங்கும் பல வடிவங்களில் காணப்படுகின்றன.‌ 

தாவரங்களை உண்டுவாழும் மான், முயல் போன்ற  உயிரினங்கள் உடல்களிலும் இந்த கார்பன்-14 அணுக்கள் வந்தடைகின்றன. 

சிங்கம், புலி போன்ற ஊன் உண்ணிகள் மான், முயல் போன்ற கார்பன்-14 அணுக்கள் நிறைந்த விலங்குகளைச் சாப்பிட்டுத் தான் உயிர் வாழ்கின்றன. இதனால், இந்த உயிரினங்களின் உடலிலும் கார்பன்-14 வந்தடைகிறது.

ஆக உயிருடன் இருக்கும் போது நம் உடலில் மட்டும் அல்ல பிற உயிரினங்களின் உடலில் எப்போதும் 0.1% கார்பன்-14 வந்து சேர்ந்த வண்ணம் உள்ளது. இந்த கார்பன்-14 தொடர்ந்து கதிர்வீச்சை உமிழ்ந்து இறுதியாக மீண்டும் நைட்ரஜனாகவே மாறுகிறது. 

குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன?

ஒரு கிராம் கார்பன்-14 என்பது, அரை கிராமாகக் குறைய 5,730 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 5,730 ஆண்டிகளில் இது கால் கிராமுக்கு வந்துவிடும். இப்படி கார்பன்-14 என்பதன் அளவு நாள்கள் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் எந்த ஒரு தாவரமோ அல்லது  விலங்கோ இறந்தால், அதன் உடலில்  கார்பன்-14  படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது. காரணம் இறந்த உடலில் கார்பன்-14 வந்து சேர வழி எதுவும் இல்லை.

கார்பன்-14 எவ்வளவு குறைந்துள்ளது? என்று கணக்கிட்டு அந்த உயிரி இறந்த காலத்தைக் கணக்கிடலாம் என்று வில்லாடு லிப்பி என்பவர் 1949ஆம் ஆண்டு கண்டறிந்தார்.  

மேலும் 1949ஆம் ஆண்டு எகிப்து பிரமீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மரத்துண்டில் 38.371 விழுக்காடு தான் கார்பன்-14 இருக்கிறது. எனவே இது 4000 ஆண்டுகள் பழைமையானது எனக் கண்டறிந்தார்.‌

அன்று முதல் கார்பன்-14, பண்டைய உயிரினங்களின் எச்சங்களின் வயதைக் கண்டறிய உதவுகிறது. இந்த முறைக்கு Carbon Dating என்று பெயர். இந்தக் கண்டுபிடிப்பிற்காக 1960ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கீழடியில் கிடைத்த நெல் மணியைச் சோதனை செய்ததில் 26.9 விழுக்காடு கார்பன்-14 குறைவாகக் காணப்பட்டது. இதிலிருந்து அந்த நெல் மணி  2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கண்டறியப்பட்டது.

ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணியில் 35.4 விழுக்காடு அளவுக்கு கார்பன்-14 குறைவாகக் காணப்பட்டது. இதிலிருந்து அந்த நெல் மணி 3,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கண்டறியப்பட்டது. 

இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு 45,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது பொருட்களின் வயதைக் கண்டறிய முடியாது.‌ காரணம் அப்போது  கார்பன்-14 அளவு கணக்கிட முடியாத அளவு குறைந்து விடும்!

ஆனால் நம் பூமி எப்போது தோன்றியது, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமயமலை எப்போது தோன்றியது. 

செருப்பு தைக்கவும் தெரியும் நாட்டை ஆளவும் தெரியும்னு சொன்ன ஜனாதிபதி ! 

நாம் கண்டெடுத்த  ஒரு  தொல்லுயிர் படிமம் (fossil)  அல்லது பாறை எப்போது தோன்றியது? என்ற‌ கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேறு வழிமுறைகள் உள்ளன. இதற்கு யுரேனியம் 238 என்ற ஐசோடோப்பை பயன்படுத்துகின்றனர்.

யுரேனியம்-238  என்ற ஐசோடோப்பு படிப்படியாகச் சிதைந்து இறுதியாக ஈயம்-206 மாறுகிறது.‌ மொத்த அளவில் இருந்து யுரேனியம்-238 பாதியாக குறைந்து ஈயம்-206 உருவாக்க 447 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

எவ்வளவு யுரேனியம்-238 ஈயமாக மாறியுள்ளது? எனக் கணக்கிட்டுத் தான் தொல்லுயிர் படிமங்கள், பாறை மற்றும் மலைகளின் வயதைக் கண்டறிகின்றனர். இந்த முறைக்கு Uranium dating என்று பெயர்.

பூமியுடைய வயது 445 கோடி ஆண்டு... எப்படி கண்டுபிடிக்கிறாங்க தெரியுமா?

தமிழகத்தில்  மிகப் பழமையான எழுத்து, கீழடியில் தான் கிடைத்தது. இது 2,600 ஆண்டுகள் பழமையானது.‌ இதன் காலத்தைக் கணிக்க கார்பன்-14 அளவீடு பயன்பட்டது.‌

தேனி மாவட்டத்தில் புலிமான்கோம்பை என்ற‌ இடத்தில் கிடைத்த நடுகல்லில் காணப்பட்ட எழுத்து 2300 ஆண்டுகள் பழமையானது. பொதுவாக  வடிவத்தை வைத்துதான் எழுத்தின் காலத்தைக் கண்டறிகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை அல்லது செங்கல் எப்போது தயாரிக்கப்பட்டது? என்பதனை அதன் ஒளிர்வு தன்மையை வைத்து (luminescence dating) கண்டறியப் படுகிறது. 

சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பான் பூச்சியை !

பழைமையான பொருள்கள் அதிகமாக ஒளிர்கின்றன. இந்தக் கருவி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பீர்பால் சைனி‌ தொல் அறிவியல் நிறுவனத்தில் (Birbal Sahni Institute of Palaeosciences) உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings