இன்டீரியர் டிசைனர் ஷாருக்கான் மனைவி தொடங்கிய ரெஸ்டாரன்ட் !

0

மும்பையில் பல ரெஸ்டாரன்ட்டுகள் கெளரிகான் தான் இன்டீரியர் டிசைனிங் செய்து கொடுத்திருக்கிறார். 

இன்டீரியர் டிசைனர் ஷாருக்கான் மனைவி தொடங்கிய ரெஸ்டாரன்ட் !
பாலிவுட்டில் ஆலியா பட், கரண் ஜோகர், மலைகா அரோரா, அனன்யா பாண்டே ஆகியோரின் வீட்டை தனது இன்டீரியர் டிசைனிங் மூலம் அலங்கரித்துக் கொடுத்திருக்கிறார். 

அதோடு ஷாருக் கான் நடிக்கும் பெரும்பாலான படங்களை கெளரி கான் தான் தயாரிக்கிறார். புதிதாக அவர் மும்பையில் தாங்கள் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றைத் தொடங்கி யிருக்கிறார். 

ரெஸ்டாரன்ட் டோரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரெஸ்டாரன்ட் கடந்த வாரம் தான் செயல்பட ஆரம்பித்தது. இதையடுத்து தனது பாலிவுட் நண்பர்களுக்கு கெளரி கான் தனது ரெஸ்டாரன்ட்டில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

(getCard) #type=(post) #title=(You might Like)

இப்பார்ட்டியில் தயாரிப்பாளர் கரண் ஜோகர், ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே மற்றும் அவரது காதலன் அர்ஸ்லான், நடிகர் சஞ்சய் கபூர் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கெளரி கானின் நெருங்கிய தோழிகள் அனைவரும் இப்பார்ட்டியில் கலந்து கொண்டனர். கெளரி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெஸ்டாரன்ட்டிக் இன்டீரியரைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். 

இன்டீரியர் டிசைனர் ஷாருக்கான் மனைவி தொடங்கிய ரெஸ்டாரன்ட் !
தங்க வர்ணத்தில் சிவப்பு மற்றும் பச்சை கலர் மின் விளக்கில் ரெஸ்டாரன்ட் மின்னுகிறது. மும்பை மக்கள் தனது ரெஸ்டாரன்டிற்கு வரும்படி கெளரி கான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஷாருக் கான் நடிப்பு மட்டுமல்லாது சொந்தமாக ஐ.பி.எல்.கிரிக்கெட் அணியையும் வைத்திருக்கிறார். 

அயிலை மீன் நாட்டு குழம்பு செய்வது எப்படி? 

மும்பையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே சொந்தமாக ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரெஸ்டாரன்ட் களில் முதலீடு செய்திருக்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)