பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?

0

தூக்கம் அல்லது நித்திரை (sleep) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஓர் இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை அவசியமாகும். 

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?
பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும்.பகல் நேரத்தில் எப்போதும் தூங்கி வழிஞ்சிக்கிட்டே இருக்கீங்களா? காரணம் முன் தினம் இரவு நீங்கள் சரியாக தூங்கி இருக்க மாட்டீர்கள். 

இதன் விளைவு தான் சோம்பல் என்பது. நல்ல இரவு தூக்கத்துக்கு பிறகும் மறுநாள் காலை நீங்கள் சோம்பலை உணர்ந்தால் அது சரியானது அல்ல. நீக்கள் சோர்வாகவும் தூக்கமாகவும் உணர சில சிக்கல்கள் இருக்கலாம்.

இதில் நீங்கள் கவனம் செலுத்த வில்லையெனில் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தலைவலி, உடல் வலி இரவில் தூக்கம் இல்லாதது, எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்தாது. 

படிப்புகளில் கவனம் செலுத்த முடியாத நிலை, மன அழுத்தம், மனசோர்வு தினசரி வேலையை செய்வதில் சிரமம், அஜீரணம், சலிப்பு போன்றவை உருவாகலாம். ஆயுர்வேதம் சொல்வதை பார்க்கலாம்.

நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும் அறிந்து கொள்ள !

​தூக்கம் குறித்து ஆயுர்வேதம்

தூக்கம் குறித்து ஆயுர்வேதம் சொல்வது நாள் முழுக்க தூக்கம் வருவதை நீங்கள் உணர்ந்தால் அதற்கு உடல் காரணங்கள் பலவும் உள்ளன. அல்லது மன அழுத்தத்துடனும் தொடர்பு கொண்டிருக்கலாம்.

மிக முக்கியமான விஷயம் இதை பலரும் தங்களுக்குள்ளே வைத்து கொள்வது தான். முன்னதாக நீங்கள் தூக்கத்தை எப்போதும் கொண்டிருக்க காரணங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

​காஃபைனாக இருக்கலாம்

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?

முன் தினம் இரவு உங்கள் துக்கத்துக்கு முன்பு நீங்கள் காஃபின் கலந்த காஃபி அல்லது தேநீர் குடித்திருக்கலாம். இரவு நேரதூக்கம் குறைந்தது ஆறு முதல் 7 மணி நேரம் வரை அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் தூங்குவதற்கு முன்னதாக 4 மணி நேரத்துக்கு முன்பே நீங்கள் காஃபைன் பானத்தை தவிர்த்திருக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

கொசுதானே என்ன ஆகிவிடும் என்று அலட்சியப் படுத்த வேண்டாம் !

​மன அழுத்தம்

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?

மனச்சோர்வு அல்லது கோபம் போன்றவை தூக்கத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன.இது மறுநாள் உங்களை மந்தமாகவும், சோர்வாகவும் வைக்க செய்கின்றன. 

இதனால் தூக்கமில்லாத பகல் மற்றூம் இரவுக்கு வழிவகுக்கும். நாள் முழுக்க மந்தத்தன்மையை உண்டாக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள். 

இயன்றவரை மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க செய்யுங்கள். எதிர்மறை விஷயங்களை தவிர்த்து நேர்மறை விஷயங்களை கவனியுங்கள்.

​அதிகமான உணவு

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?

இரவு உணவு அதிகமாக இருந்தால் தூக்கம் நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்வதுண்டு. எனினும் இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்காது. இரவு உணவை இயன்ற வரை மென்மையாக குறைவாக எடுத்து கொள்வது நல்லது.

இரவு உணவு அதிக நேரம் கழித்து சாப்பிடாமல் தூங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பே சாப்பிடுவது நல்லது. 

உங்கள் உணவு குறித்து சந்தேகம் இருந்தால் டயட்டீஷியனை அணுகுங்கள். அதிக உணவு கூட உங்களை நாள் முழுக்க சோம்பலாகவோ தூக்க கலக்கத்திலோ வைக்கலாம்.

ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?

சோம்பேறிகள்

வெகு சிலர் இயற்கையிலே சோம்பல் உணர்வை கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் அவர்களை பற்றிய கவலை இல்லை. 

அவர்களது எதிர்காலம் குறித்த அக்கறையும் இல்லை. அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே பொழுதை போக்குவார்கள்.

இவர்கள் மந்தத்தன்மை எதிர்கால வாழ்வையும் கூடவே சோம்பலையும் அதிகரிக்க செய்து விடும். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள யோகா, உடற்பயிற்சி என நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

​உடல் நல குறைபாடுகள்

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?
நீரிழிவு நோய் போன்று சில பிரச்சனைகள் கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் அது உடலை பலவீனமாக்கி நாள் முழுவதும் உங்களுக்கு தூக்கத்தை உண்டாக்கலாம். 

நீரிழிவு உடலை பலவீனமாக்கி நாள் முழுக்க தூக்கத்தை உண்டாக்கும். அதனால் நீரிழிவு இருப்பவர்கள் சரியான இடைவெளியில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் செய்வது எப்படி?

​ஆயுர்வேதம் படி தூக்க நிலை

பகல்லயும் தூக்கம் வருதா? இது தான் காரணம்?
ஆயுர்வேதம் சொல்வது படி உடலில் கபம் அதிகம் உள்ளவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது. உங்கள் இரவு தூக்கம் நீண்ட நேரம் இருந்தால் நீங்கள் கபத்தை கொண்டிருக்கலாம். 

இதை தவிர்க்க என்ன செய்யலாம். பகலில் தூக்கம் வந்தால் இடையில் குறுகிய தூக்கத்தை எடுத்து கொள்வது நல்லது. இதன் மூலம் பகலில் சுறுசுறுப்பை உணரலாம். 

இந்த பகல் தூக்கம் குறுகியதாக இருக்க வேண்டும். அதிக நேரம் இருக்க கூடாது. 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருந்தால் போதும்.

உடலில் அஜீரணம் ஏற்பட்டால் அது தூக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்கி விடும். இதை தவிர்க்க செரிமானத்தை ஊக்குவிக்க இஞ்சு மற்றூம் மிளகு சேர்த்து கொள்ளுங்கள். 

பால் இல்லாத இஞ்சி தேநீர் கூட ஏற்றது தான். எளிமையான பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது ஆக்ஸிஜனை உடல் முழுக்க எடுத்து செல்வதில் உதவி புரிகிறது. இது தானாகவே ஆற்றல் மிக்க அதிர்வுகளை தருகிறது.

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?

பகல் நேரங்களில் காற்றோட்டமில்லாத இடத்தில் இருக்கும் போது அது மெலடோனின் சுரப்புக்கு வழிவகுக்கிறது. இதனாலும் தூக்கம் வரலாம். உட்காரும் முறை தோரணையாக இருந்தால் தூக்க கலக்கம் வராது. 

தூக்கம் வரும் போது பிராணயாமா செய்யுங்கள். இது ஆற்றலை உண்டாக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவும் உடலை நீரேற்றத்துடன் வைத்து கொள்ளுங்கள். பழங்கள் அதிகமாக எடுத்து கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)