பாகிஸ்தானில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட பெண் !

0

கருணையுள்ளம் கொண்ட பெண் இனத்திற்கே இந்த 2 பெண்களால் மிக பெரிய தலைகுனிவு. இவர்கள் பெண்கள் அல்ல மனித உருவில் உள்ள மிருகங்கள்.

பாகிஸ்தானில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட பெண் !
சுமார் 2 வருடங்களுக்கு முன்பு உஸ்மா இவர்கள் வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்தார். அந்த வீட்டில் தூங்குவதற்காக உஸ்மாவுக்கு பாத்ரூமை (குளியலறை) ஒதுக்கினர். 

ஒரு நாளில் எந்த அளவுக்கு அதிகமான வேலையை வாங்க முடியுமோ அவ்வளவு வேலையை உஸ்மாவுக்கு கொடுத்தனர். அது மட்டுமின்றி உஸ்மாவுக்கு சரியான உணவும் வழங்கப்பட வில்லை. 

சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் கோபத்தில் இவர் மீது வன்முறையையும் கையாண்டனர். இதனால் இவரின் நிலை என்னவானது என்பதை கீழே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கார பெண்ணாக இருந்தாலும் உஸ்மா ஒரு சிறுமி தான். ஒரு நாள் விளையாட்டாக உஸ்மா தனது முதலாளியின் இளைய மகளின் தட்டில் இருந்து உணவை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டிருக்கிறார்.

பாலியல் கொடுமையால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் !

இது அங்கிருந்த 2 பெண்களுக்கும் (மிருகங்களுக்கும்) மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் அந்த விபரீதம் அரங்கேறியது.

கோபமடைந்த அந்த மனித மிருகங்கள் உஸ்மாவை அடித்து உதைத்தனர். வீட்டில் இருந்த ஒரு இரும்பு கம்பியை வைத்து உஸ்மாவின் தலையில் பலமுறை தாக்கினார்கள்.

இதனால் தலையில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. உஸ்மா இவர்கள் கொடுத்த வலியின் கொடுமையை தாங்க முடியாமல் மயக்கமுற்றாள்.

பாகிஸ்தானில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட பெண் !
அழகான அரக்கிகள்
இதைவிட பெரிய கொடுமை என்ன வென்றால் இதன் பிறகு காயமடைந்த உஸ்மாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக உஸ்மாவின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி அவளது அலறலையும் வேதனையையும் ரசித்திருக்கிறார்கள்.

உஸ்மாவின் உயிரை பறித்த அந்த மிருகங்கள் எல்லாம் முடிந்த பின்னர் அவளின் உடலை ஒரு பையில் போட்டு அந்த ஊரிலுள்ள பெரிய குப்பைக்குள் போட்டார்கள்.

இதன் பின்னர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு தங்களின் வீட்டில் தங்கநகை மற்றும் பணத்தை திருடி கொண்டு உஸ்மா எங்கேயோ ஓடி விட்டாள் என்று புகாரளித்து நாடகமாடினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கொடுக்கவே காவல் துறையினருக்கு இவர்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது?

பின் காவல் துறையினர் தங்களது பாணியில் கிடுக்குபிடி விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடித்தனர்.

இறுதியில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப் பட்டனர். குப்பையிலிருந்து உஸ்மாவின் உடலை கண்டுபிடித்த காவல் துறையினர் இது உஸ்மா தானா? என்று அடையாளம் கண்டறிய பெற்றோர்களிடம் சடலத்தை காண்பித்தனர்.

பாகிஸ்தானில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட பெண் !

அந்த நிலையில் பெற்றோர்களால் கூட தங்கள் அன்பு மகளின் முகத்தை அடையாளம் காட்ட இயலவில்லை. உஸ்மாவின் உடலை குப்பையிலிருந்து எடுத்த போது அங்கிருந்தவரின் சாட்சி இது தான்.

அவள் வெளிர் நீலத்தில் சட்டையும் நீலநிற சல்வார் மற்றும் அடர் சாம்பல் நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்.அவள் கழுத்தில் ஒரு சாம்பல் நிற சால்வை இருந்தது.

மிகவும் ஒல்லியான கைகள் காயம் நிறைந்த முகம் மற்றும் அவள் நாக்கில் ஒரு வெட்டு இருந்தது. மார்பு பகுதியில் பல வெட்டு காயங்கள் இருந்தது. இந்த கொடுமையை அனுபவித்து உயிரை விட்டபோது உஸ்மாவின் வயது 16 .

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings