லவ் பண்ணேன்.. ரகசியமா பேசினேன்.. லட்சுமி மேனன் ஓபன் டாக் ! I

0

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27).

லவ் பண்ணேன்.. ரகசியமா பேசினேன்.. லட்சுமி மேனன் ஓபன் டாக் !
தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். 

அதன் பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதனை யடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். 

வாய் புண்களை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள் !

இதற்கிடையில், விஷாலுடன் இணைந்து, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில், அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். 

பள்ளியில் படிக்கும் போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இது போல எதுவும் நடக்கவில்லை. அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார்.

நான் என்னுடைய படிப்பில் கவனமாக இருந்தேன். நண்பர்கள் போலவே இருந்தோம்.. எப்போதாவது ஒரு முறை தான் பேசிக் கொள்வோம். பள்ளி காலம் முடியும் தருவாயில் தான் அடிக்கடி பேச தொடங்கினோம். 

தொலைபேசியில் பேச தொடங்கினோம். போர்வையை போற்றிக் கொண்டு அவருடன் நான் ரகசியமாக பேசுவேன். வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி சுற்றி வந்து தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.

அக்பரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம் !

ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போய் விட்டது. நான் என்னுடைய துறையில் பிஸியாகி விட்டேன். அவர் அவருடைய துறையில் பிஸியாகி விட்டார். தற்பொழுது திருமணமும் செய்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)