மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் செய்த காரியம் !

0

பூமியில் மிகவும் கொடிய மற்றும் விஷமுள்ள உயிரினங்களில் முக்கிய இடத்தில் உள்ளது பாம்பு வகைகள். பாம்பு என்றால் படையும் என்பது ஊர் அறிந்த உண்மை. 

மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் செய்த காரியம் !
எவ்வளவு பெரிய தைரியசாலி, பலசாலியாக இருந்தாலும் பாம்பு முன் வந்தால் சிறு நடுக்கம் ஏற்பட்டு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு சிலிர்ப்பை தரும்.  

WHO (உலக சுகாதார அமைப்பின்) அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 1,38,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர். அதேபோல், பாம்பு கடியால் பலரது வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. 

33 வயதில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஆனால் சில சம்பவங்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக் குள்ளாக்கிய நேரங்களும் உள்ளன. 

அந்த வகையில், நாமக்கலில் தனது மனைவியை கடித்த பாம்பை அவரது கணவர் அரசு மருத்துவ மனைக்கு ஆதரத்திற்க்காக எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான ரேவதி. இவர் தனது கணவர் சக்திவேலுடன் தென்னை மர தோப்பிற்கு கூலி வேலைக்காக சென்றுள்ளார். 

இவர்களுடன் சென்று மேலும் 15 லிருந்து 20 பேர் தோப்பில் வேலை பார்த்து வந்துள்ளனர்.  தென்னை மர தோப்பை சுற்றி செடி, கொடி படர்ந்து அடைந்து இருந்ததால் எங்கு என்ன இருக்கிறது யாரும் தெரியவில்லை. 

இந்த நிலையில், ரேவதி வழக்கம் போல் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதியை கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி தன்னை பாம்பு கடித்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, தனது மனைவி ரேவதியை கடித்த பாம்பை சக்திவேல் அங்கிருந்த சக வேலையாட்கள் உதவியுடன் லாபகரமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தார். 

சக்திவேல் தொடர்ந்து தனது மனைவி ரேவதியை ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் அழைத்து சென்றிருக்கிறார். 

சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் !
அப்போது, தன்னை கடித்த பாம்பை அடையாளம் காண்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கொண்டு வந்துள்ளதாக ரேவதி மருத்துவரிடம் கூறியுள்ளார். 

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். தொடர்ந்து ரேவதிக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)