மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

0

ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்வதை 'மேகவெடிப்பு’ என வரையறுக்கலாம். 100 மிமீ மழைப் பொழிவு என்றாலே, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,00,000 மெட்ரிக் டன் மழைக்கு சமம்!மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

மேகவெடிப்பு (Cloud Burst), மலைகளை ஒட்டியுள்ள, குறிப்பாக தொடர்ச்சியான மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் நிகழக் கூடிய மழை விபத்து.

மிக குறுகிய காலத்தில், மிகத் திடீரென, மிக அதிக மழை பெய்யும் நிகழ்வு. இவை பெரும்பாலும் இடி மழையுடன் (thunderstorms) சேர்ந்தே தோன்றும்.

மழைமேகம் திரள்கையில் அதன் மழைத்துளிகள் தரையில் விழாமல் சில மணித்துளிகள் தடுக்கப்படுவது தான் இதன் தொடக்கப்புள்ளி. விளைவாக அந்த மேகங்களில் பேரளவில் நீர் தேக்கப் படுகிறது.

நம் தலைக்கு மேல் ஒரு பேரணை அதன் முழு கொள்ளளவை அடைந்தால்? திடீரென அந்த 'அணை' உடைந்தால்?

அது தேக்கி வைத்த நீர் முழுவதும் நிலத்தின் மேல் ஒரே நேரத்தில் விழுந்தால்? மேகவெடிப்பில் இப்படித் தான் நடக்கிறது.

ஊளை சதையா நீங்கள்? இதை படியுங்கள் !

எப்படி ஆரம்பிக்கிறது?

முதலில் மலைகளை யொட்டிய பிரதேசங்களில், மேல்நோக்கிய காற்றில் வன்முறையான எழுச்சிகள் ஏற்படும். மழைத்துளிகள் கீழே விழாமல் அணை போல் தடுக்கும். இதனால் மேகத்திலேயே அதிக அளவு நீர் குவிந்து விடும்.

திடீரென்று இந்த மேல்நோக்கிய காற்றோட்டம் பலவீனமடையும். தேக்கி வைத்த நீர், ஒரே நேரத்தில் நீர்வீழ்ச்சி போல விழும்.

ஒரு மேக வெடிப்புக்கு விருப்பமான சூழல் காரணிகள் (Ideal Conditions) :

ஏன் மலை பிரதேசங்களை அதிகம் பாதிக்கிறது?

இடியுடன் கூடிய சூடான காற்று, இப்படியான கனத்த நீரோட்டங்கள் 'மேலேறுவதற்கு' ஒரு மலையின் சரிவு மிகவும் உதவுகிறது. அதே போல மேகவெடிப்பினால் பெய்யும் பலத்த மழையின் விளைவுகள் மலை சரிவுகளில் பெரும் சேதம் விளைவிக்கக் கூடியவை. 

இந்த நீர் மலை முகட்டிலும், பள்ளத்தாக்குகளிலும் குவிந்து சமவெளியை நோக்கி பாய்கின்றன.

மேகவெடிப்பு ஒரு பேரிடரா?

மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

அதனளவில் மேகவெடிப்பு (Cloud Burst) ஒரு பேரிடர் அல்ல. கடல் மீது வெடித்தால் அது செய்திகூட இல்லை. மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் மேகவெடிப்பு தான், பெருவெள்ளம், மண்சரிவு என்று பேரிடரை நோக்கி மக்கள் வாழ்வை அடித்துச் செல்கிறது.

மனிதனால் கட்டப்பட்ட அணைகள், இந்த இயற்கை நிகழ்வை பேரிடர் நிலைக்கு கொண்டு செல்லலாம். உங்கள் மனதில் தோன்றும் அணையின் பெயர் சரியானதே.

இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பனிபடர் மாநிலம் உத்தரகாண்ட். அடிக்கடி மேக வெடிப்புகளின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னா பின்னமாகிறது.

2013ல் டேராடூன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 24 மணி நேரங்களுக்குள்ளாக 370 மி.மீ. மழை பதிவாகியது. 5700க்கும் மேல் மனிதர்கள், பல்லாயிரம் உயிரினங்கள் மரித்தனர்.

கங்கை ஆற்றின் மேல்புறத்தில் கட்டப்பட்ட அணைகளும், அதன் துணை நதிகள் மந்தாகினி, பாகீரதி, அலக்நந்தா ஆறுகளில் கட்டப்பட்ட அணைகளும் பேரழிவை தீவிரப்படுத்தின என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டினர்.

ஒரு மலைத்தொடர், ஒரு தொடர் மழை. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறம், இயற்கைக்கு ஒரு அந்தப்புரம். அந்த எழில் கேரளத்திலும் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்படுவதுண்டு.

கபே காபி டே சித்தார்த்தா சிக்குவதற்கான காரணம் !

இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெட்டி முடியில் 100 பேருக்கு மேல் இறந்த நிலச்சரிவு சம்பவம் மேக வெடிப்பால் தோன்றிய மழையினால் என்று செய்திகள் வந்தன.

ஆகஸ்ட் 5ல் 310 மி.மீ மழை, ஆகஸ்ட் 6ல் 620 மி.மீ மழை. நான்கு நாட்களில் மொத்தம் 1840 மி.மீ மழை பதிவாகி யுள்ளது. இந்தியாவின் ஆண்டுச் சராசரி மழையளவே 1120 மில்லி மீட்டர் தான். 

இந்த மேகவெடிப்பைக் கற்பனை செய்வதே கடினம். 1924 கேரள மகா பிரளயத்துக்கு அடுத்து இதுவே அதிகபட்ச மழை. அந்த கேரள பிரளய காலத்தில் பெய்த மழை 3,368 மி.மீ.

மூணாறு உண்மையிலேயே மூழ்கி விட்டது. சம்பவம் முல்லைப் பெரியார் அணை கட்டி 29 வருடங்களுக்கு பிறகு நடந்தது.

தடுக்க முடியுமா?

மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

வழக்கமாக மேக வெடிப்பு நடைபெறும் பகுதிகளில் மிகவும் கடுமையான மேக மூட்டங்கள் தெரிந்தால் மேகவெடிப்பை ஓரளவு ஊகிக்க முடியும். மற்றபடி பெரும்பாலும் இது ஒரு திடீர் விபத்து தான்.

சமீபத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தி ருக்கிறார்கள். வானிலை அறிவியலார்கள் மேகவெடிப்பை கண்டுபிடித்து எங்களிடம் சொன்னால் போதும்.

நாங்கள் அந்த மேகங்களை உடனே ஒரு குண்டு வைத்து வெடித்து, அதை சிதைத்து, சேதத்தை தவிர்த்து விடுவோம் என்று வெடிகுண்டு அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

திடீரென மேகவெடிப்பு எப்படி ஏற்படுகிறது. 

மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

வானிலை மாற்றத்தின் போது என்ன நடக்கும் என்பதை அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் விளக்கி உள்ளார். மேக வெடிப்பு (Cloud Burst) ஒரு பகுதியில் நடைபெறும் குறுகியகால தீவிர மழைப்பொழிவு ஆகும். 

பொதுவாக நிலம் சூடாகும் போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகி விரிவடைந்து ஆவியாகும். இதனால் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதால் நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும். 

உயரம் ஏற ஏற வளிமண்டலத் தட்ப வெப்பநிலை குறைந்து கொண்டே போகும். 15 கிமீ வரை உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும்.

இப்படி சேரும் நீர்த்திவலைகள் சேர்ந்து எடை கூடும் நேரம் அந்த மேகங்களின் 'மேல் குளிர் காற்று வீசினால் மழையாகப் பொழியும், குறைந்த நேரத்தில் இந்த செயல்கள் எல்லாம் நடந்து வீரியம் கூடி பொழிந்தால் அது மேக வெடிப்பு என வரையறுக்கப் படுகிறது. 

இணைய விபச்சாரம் என்றால் என்ன? கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் !

சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழை மேகம் உருவாகி 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்தால் அது தான் மேக வெடிப்பு.

மேக வெடிப்புகள் பொதுவாக இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடையது. மேலும் மழைப் புயலில் மேல்நோக்கிச் செல்லும் காற்று நீரோட்டங்கள் அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்கும். 

இந்த நீரோட்டங்கள் திடீரென நிறுத்தப்பட்டால், மொத்த நீரும் ஒரு சிறிய பகுதியில் திடீரென ஒரு அபாயகரமான சக்தியுடன் இறங்கி பேரழிவை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் செங்குத்தான மலைகள் மேகங்கள் உருவாவதற்கு ஏற்ற இடமாகும். 

மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? ஆபத்தானதா?

மேக வெடிப்பால் செங்குத்தான மலைச் சரிவுகளில் பாயும் நீரால் சேதமான கட்டமைப்புகளால் குப்பைகள், கற்பாறைகள் மற்றும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டு அடித்து வரப்படுகின்றன. 

சமீப காலங்களில் மேக வெடிப்புகள் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வுகள் போன்ற தீவிர மழை நிகழ்வுகள் இமயமலைப் பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளன.

காண்டின் கர்வால் மற்றும் குமாவோன் பகுதியில் இயற்கையான மற்றும் பொதுவான நிகழ்வாகும். மேக வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings