விண்வெளி உடையை பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் !

0

ஸ்பேஸ் சூட்கள் விண்வெளியில் உள்ள தீவிர வெப்பநிலையில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கின்றன. அவை -250 டிகிரி பாரன்ஹீட் குளிர் முதல் அதிகபட்சமாக +250 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வரை தாங்கும் வல்லமை கொண்டவை. 

விண்வெளி உடையை பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் !
உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், விண்வெளி பயணத்தின்போது கூடுதல் வெப்பத்தை அகற்றவும் குழாய்கள் வழியாக குளிர்ந்த நீர் விண்வெளி வீரர்கள் உடலில் படும்படி உடை அமைப்பு உள்ளது. 

இது பொதுவாக பல மணி நேரம் நீடித்த செயல்முறை ஆகும். ஆடையில் உள்ள துவாரங்கள் வழியாக விண்வெளி வீரரின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றும் அமைப்பு உள்ளது.

விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட, சிறிய விண்கலம் போலிருக்கும். விண்வெளியில் நிலவும் கடினமான சூழலைச் சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த விண்வெளி உடைக்குள் சுவாசிக்க ஆக்சிஜன் இருக்கும். குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். விண்வெளி நடை மேற்கொள்வதற்குப் பல மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆடையை விண்வெளி வீரர்கள் அணிந்து விடுவார்கள்.

விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டுகள் பாலிகார்பனேட்டால் ஆனவை. அவை குண்டு துளைக்காத கண்ணாடியால் உருவாக்கப்பட்டு இருக்கும். 

பல வருடங்களாக விண்வெளி உடை பல மாற்றங்களை அடைந்து, தற்போது வெள்ளை நிறத்தில் தயாரிக்கப் படுகிறது. 

ஏனெனில் அது பூமியில் இருப்பதைப் போலவே விண்வெளியிலும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது. நாசா ஸ்பேஸ்சூட்டின் விலை தோராயமாக ரூ.92 கோடி முதல் ரூ.114 கோடி வரை இருக்கும்.

ஒரு ஸ்பேஸ்வாக் சூட் நம்பமுடியாத அளவிற்கு கனமானது, சுமார் 280 பவுண்ட் (127 கிலோ) எடை கொண்டது. 

ஆனால் விண்வெளி நிலையத்திற்கு வெளியே உள்ள புவியீர்ப்பு விசை அற்ற நிலையில் சந்திரனின் மேற்பரப்பில் அது 26 கிலோ (வெறும் 57 பவுண்டுகள்) மட்டுமே இருக்கும்.

ஸ்பேஸ்சூட் 16 அடுக்குகளைக் கொண்ட 12 செயற்கைப் பொருட்களின் கலவையால் உருவானது. உட்புற அடுக்கு நைலான் டிரிகோட் பொருட்களால் ஆனது. 

அடுத்த அடுக்கு ஸ்பான்டெக்ஸைப் என்ற மீள் பாலிமரால் உருவானது. இதைத் தொடர்ந்து யூரேதேன் என்ற அடுக்கும் உள்ளது. விண்வெளி வீரர்கள் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருக்க வேண்டும். 

எனவே அவர்கள் சிறுநீரை வெளியேற்றுவதற்காக தங்கள் ஸ்பேஸ்சூட்களில் உள் பைகள் இணைக்கப் பட்டுள்ளது. குடிநீருக்காக தனியாக ஒரு அமைப்பும் உள்ளது.

ஸ்பேஸ் சூட் ஆனது ஆக்சிஜன் வழங்குதல், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுதல், காற்றோட்ட விசிறி, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் மின்சார சக்தி, விண்வெளியின் அதிசயங்களைப் பதிவு செய்வதற்கான கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

விண்வெளி உடையை பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் !
நாசா விண்வெளி வீரர்களின் உடை EMU (extravehicular mobility unit) என்று அழைக்கப் படுகிறது. இந்த வெள்ளை உடையின் பின்பக்கம் ஆக்சிஜன் சிலிண்டரும் உயிர் காக்கும் பொருட்களும் இணைக்கப் பட்டிருக்கும்.

ஒரு விண்வெளி வீரர் ஒரு உதவியாளரின் உதவியுடன் விண்வெளி உடையை அணிய 15 நிமிடங்கள் ஆகும். ஸ்பேஸ்சூட் போடுவது டான்னிங் என்றும், அதை அகற்றும் முறை டாபிங் என்றும் அழைக்கப்படுகிறது.

விண்வெளி வீரர்களை தூசியின் தாக்கங்களில் இருந்தும், விண்வெளி கதிர்வீச்சுக்களில் இருந்தும் இந்த உடைகள் பாதுகாக்கின்றன. 

விண்வெளியின் ஒரு தூசியின் தாக்குதல் கூட, அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.இந்த உடையில் ஏழு மணி நேரம் வரை ஆக்சிஜனை சேமிக்க முடியும். 

மேலும் விண்வெளி உடையில் இரண்டாம் நிலை ஆக்சிஜன் தொட்டியும் உள்ளது. இது விண்வெளி வீரர்களுக்கு 30 நிமிட அவசர கால ஆக்சிஜனை வழங்கும்.

பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !

இந்த உடையில் 14 அடுக்குகள் இருக்கும். இதில் 3 விதமான பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப் பட்டிருக்கும். 

1. விண்வெளி வீரரை அதிகமான வெப்பம் தாக்காத விதத்தில் குளிர்ச்சியான திரவம் வைக்கப் பட்டிருக்கும். 

2. அழுத்தம் ஒரே விதத்தில் இருக்கும் வண்ணம், காற்று அடைக்கப் பட்டிருக்கும். 

3. சூரியக் கதிர்வீச்சிலிருந்தும் விண்வெளிப் பொருட்களில் இருந்தும் காக்கும் விதத்தில் துணி வைக்கப் பட்டிருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings