ஒடிசாவில் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் !

1

ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் !
தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். 

ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி எல்லாம் இருப்பார்களா என்று நினைப்பையும் தருகிறது.

அந்த தாய்க்கு 70 வயது ஆகிறது. அவரது இளைய மகன் காலிஃப்ளவர் தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். அந்த தோட்டத்தில் காலிஃப்ளவரை பறித்து அவர் உணவு சமைத்து சாப்பிட்டதாக சொல்லப் படுகிறது.

(getCard) #type=(post) #title=(You might Like)

மின் கம்பியில் கட்டி வைத்து தனது தாயை அடித்துள்ளார். இதனைப் பார்த்த கிராம மக்கள் அவனை திட்டி உள்ளனர். கிராம மக்களையும் அந்த தாயின் மகன் மிரட்டி உள்ளான்.

எப்படியோ அந்த கொடூர மகனிடம் இருந்து அந்த மூதாட்டியை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் போலீசார் சம்பவம் குறித்து அந்த மூதாட்டியிடம் விவரத்தை கேட்டனர், மேலும் அவரது மகன் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக ஐஐசி திரிநாத் சேதி தெரிவித்தார்

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment
Privacy and cookie settings