பாவனாவிடம் சாரி கேட்ட தல.. மாஸ் வீடியோ !

பாவனாவிடம் சாரி கேட்ட தல.. மாஸ் வீடியோ !

0

தமிழ் ரசிகர்களால் 'தல' ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத்குமார். இவர் தற்ஓது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

பாவனாவிடம் சாரி கேட்ட தல.. மாஸ் வீடியோ !
நடிகர் அஜீத்துடன் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா 5 வது முறையாக இணைந்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் அர்ஜீன், ஆரவ், நடிகை ரெஜினா உட்பட பல நட்சத்திரப் பட்டாளங்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். 

இந்தப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை பாவனா நடிகர் அஜித்தை சந்தித்து இருக்கிறார். 

இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜீத் சிலருடன் பேசிக்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சரியாக அங்கே பாவனா வர.. அவரிடம் அஜித், கொஞ்சம் லேட்டாகி விட்டது என மன்னிப்பு கேட்கிறார். 

அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகத் தான் வந்தேன் எனக் கூறிக்கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

(getCard) #type=(post) #title=(You might Like)

இவர்கள் இருவரும் முன்னதாக அசல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக விடாமுயற்சி என்ற பட டைட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. 

சந்திரமுகி 2 நிகழ்ச்சியில் பேசிய இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். கைவிடப் படவில்லை. விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறியிருந்தார். 

இந்தப் படத்தில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்து பணிபுரிந்த ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். தெறி படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத், இந்தப்படத்தில் அஜித்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)