ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொறியியல் மாணவர்கள்.. கொடூரம் !

0

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான என்ஜினீயரிங் மாணவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்து ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொறியியல் மாணவர்கள்.. கொடூரம் !
இந்த மாணவர் ஓரின சேர்க்கை யாளர்களுக்கான செயலி ஒன்றில் அடிக்கடி தகவல் பகிர்ந்து வந்துள்ளார். இந்த செயலியில் அறிமுகமான வாலிபர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் நேற்று மாலை சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். 

அவருடன் மாணவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மேலும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். நால்வரும் மாணவரை தாக்கி ஆடைகளை கழற்றி நிர்வாணபடுத்தி கொடுமை படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பின்னர் மாணவரின் செல்போனை பறித்த கும்பல் மாணவனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

(getCard) #type=(post) #title=(You might Like)

இதனை யடுத்து அந்த கும்பல் மாணவரின் செல்போனை பறித்து கொண்டு 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.‌ 

தாக்குதலில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

மாணவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)