நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம்.. ஹீரோயின் தெரியுமா?

0

சில்க் ஸ்மிதாவை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவை பேச முடியாது. ஏனெனில் அவர் கோலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே அதிகம். தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். 

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம்.. ஹீரோயின் தெரியுமா?
முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது. 

அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்துக்கிடந்தது என்பது தான் உண்மை. 

குறிப்பாக படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் அனைவருமே படத்தில் சில்க் ஸ்மிதா பாட்டு இருக்கா என கேட்டு விட்டுத் தான் அந்தப் படத்தை வாங்குவதும் அப்படி இல்லையென்றால் சில்க் பாட்டு ஒன்ன வைங்க என சொல்வதும் அரங்கேறியது. 

அந்த அளவு ரூல் செய்தார் சில்க் ஸ்மிதா. அலைகள் ஓய்வதில்லை படத்திலும் சில்க்கின் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருந்தது. 

குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் ! 

அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் அவருக்கு சிறந்த நடிகை இருக்கிறார் என்பதை ரசிகர்களும், திரையுலகினரும் புரிந்து கொண்டார்கள். 

அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவுக்கு கேடயம் வழங்கிய எம்ஜிஆர் மேடையில் பேசும் போது சில்க் ஸ்மிதா தொடர்ந்து இந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

இப்படி பல பாராட்டுக்களை பெற்ற பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட வுள்ளது. 1980-90 களில் ஏராளமான தென்னிந்திய படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சில்க் ஸ்மிதா.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சில்க் ஸ்மிதாக நடித்துள்ளார். 1996 செப்டம்பர் 23 ஆம் தேதி அவர் மறைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்தது.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம்.. ஹீரோயின் தெரியுமா?

தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பயோ பிக்காக எடுக்கப்பட வுள்ளது. இதனை ஜெயராம் என்பவர் இயக்கவுள்ளார். சில்க் ஸ்மிதாவின் பயோ பிக்கில் சந்திரிகா ரவி நடிப்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் சந்திரிகா ரவி பேயாக நடித்திருந்தார். ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த சந்திரிகா ரவி, மிஸ் ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்றுள்ளார்.

மருந்தாகும் உணவு வகைகள்… சில டிப்ஸ்... !

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட வுள்ளது. சில்க் ஸ்மிதா குறித்து இதுவரை வெளியாகாத தகவல்கள் இந்த படத்தில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings