கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து பரிதாபமாக 2ஆவது இடம் பிடித்தது.

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிக பட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தாமிர பாத்திரத்தில் உள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள் !

மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகி யுள்ளது. இதற்கு முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 8 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

கடந்த 2003 ஆம் ஆண்டு முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடர் நாயகனுக்கான விருது வழங்கினார்.

பனிக்குடத்தில் தண்ணீர் இருந்தும் எப்படி குழந்தை உயிர் வாழ்கிறது?

இதில் வின்னிங் டீம் பவுலரான ஆடம் ஜம்பா 23 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனுக்கான விருது பட்டியலில் இருந்தனர். எனினும், அதிக ரன்கள் குவித்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

இந்த உலகக் கோப்பை தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய பிரதர் நரேந்திர் மோடி மற்றும் 

ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் உலகக் கோப்பை டிராபியை வழங்கினர்.

இது வரையில் விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று மொத்தமாக 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து, 10 வெற்றிக்கும் எந்த பலனும் இல்லாமல் செய்துவிட்டது.

வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கிய அந்த தருணம்... இந்தியா டீம் !

ஆனால், ஆஸ்திரேலியா முதல் 2 லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு மீண்டும் வந்து சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு வந்தது.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் சொன்னதை, இறுதிப் போட்டியில் செய்து காட்டியுள்ளார்.

தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?

இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவோம் என்று கூறியிருந்தார். அதன்படியே இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றியதோடு, கடைசியாக வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !