எருக்க இலை போதும்... மூட்டு வலி நிமிடத்தில் பறந்து விடும் !

0

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும்.

எருக்க இலை போதும்... மூட்டு வலி நிமிடத்தில் பறந்து விடும் !
மூட்டு வலி வரக் காரணங்கள் . :

ஆரோக்கியமற்ற உணவு

ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

எலும்பு தேய்மானம் ஆகுதல்

வயது மூப்பு

வேலைப் பளு

உடல் பருமன்

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?

தேவையான பொருட்கள்:-

எருக்க இலை

கற்றாழை ஜெல்

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை . :

முதலில் 1 கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அந்த பவுலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு 1 தேக்கரண்டி மரச்செக்கு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுத்து 1 எருக்கன் இலையை எடுத்து அதன் இருபுறமும் மரச்செக்கு நல்லெண்ணெய் சிறிதளவு எடுத்து தடவவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை கமுத்தி போட்டு மிதமான தீயில் சூடு படுத்தவுதும். பின்னர் எடுத்து வைத்துள்ள எருக்கன் இலையை அதன் மேல் வைத்து இருபுறமும் சூடு படுத்திக் கொள்ளவும். 

பிறகு அடுப்பை அணைத்து கொள்ளவும். தற்பொழுது மூட்டு பகுதிகளை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணியால் மூட்டு பகுதிகளை துடைத்து கொள்ளவும்.

விண்வெளி செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை மூட்டு வலி இருக்கும் இடத்தில் போட்டு மெதுவாக மஜாஜ் செய்து கொள்ளவும். அடுத்து ஒரு காட்டன் துணி அல்லது பேண்டேஜ் கொண்டு அந்த இடங்களை கட்டிக் கொள்ளவும். 

இந்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் அப்ளை செய்து மறுநாள் காலையில் கட்டை அவிழ்த்து சுத்தமான நீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் விரைவில் மூட்டுவலி குணமாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings