கணவன் - மனைவி சண்டை... டெல்லியில் இறங்கிய விமானம் !

0

கணவன் - மனைவி இடையே நடந்த சண்டையால் பாங்காக் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப் பட்டது.

கணவன் - மனைவி சண்டை... டெல்லியில் இறங்கிய விமானம் !
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான (LH772) விமானம் ஒன்று புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. 

இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி இடையே நடுவானில் திடீரென்று தகராறு ஏற்பட்டிருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வராததால் விமானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

சென்னையில் பேருந்துகளுக்கு தனி பாதை !

மதுபோதையில் மனைவியுடன் சண்டையிட்ட கணவர் சக பயணிகளையும் அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க விமானி அனுமதி கோரியுள்ளார். 

ஆனால், அங்கே அனுமதி மறுக்கப் பட்டதால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. 

டெல்லியில் தரை யிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் பாங்காக் நோக்கி சிறிது தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கணவன், மனைவி இடையேயான சண்டைக்கான காரணம் தெரியவில்லை. 

ஆனால், அவர்கள் சண்டை யிட்டதால் அவசரமாக விமானம் தரை யிறக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, ஷங்கர் மிஸ்ரா என்ற 34 வயது நபர் நியூயார்க்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 

இந்த அறிகுறிகள் இருந்தா உங்க கண் பார்வை மங்கலாகப் போகுது !

ஏர் இந்தியா நிறுவனத்திடம் அப்பெண் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது ஜனவரி 4ஆம் தேதி டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  

ஜனவரி 6 ஆம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings