ஆடை அணியாத மக்கள்.. முழு நிர்வாணம்.. விசித்திர கிராமம் !

0

பிரிட்டனில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 90 ஆண்டுகளாக ஆணும், பெண்ணும் ஆடைகள் அணியாமல் நிர்வாணமாக வாழ்வதை மரபாக வைத்துள்ளனர். 

ஆடை அணியாத மக்கள்.. முழு நிர்வாணம்.. விசித்திர கிராமம் !
இந்த விசித்திர கிராமத்தை பற்றிய பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. 

மேலும் தற்போதைய நவநாகரீக உலகில் மக்கள் அனைவரும் விதவிதமான ஆடைகள் அணிந்து மகிழ்ந்து வருகின்றனர். சிலர் தங்கத்தால் ஆன ஆடைகளை கூட அணிந்து மக்களை ஆச்சரியப் படுத்துகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சில நாடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இயலாமை காரணமாக ஆடைகள் அணியாமல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

இதற்கு மத்தியில் தான் இன்னொரு விசித்திரமான பழக்கத்தை ஒரு கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதாவது அவர்கள் ஆடை அணிவதை விரும்பாமல் நிர்வாணமாக சுற்றி வருகின்றனர். 

ஆம் இது உண்மை தான். ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 90 ஆண்டுகளாக ஆடைகள் அணியாமல் ஆண், பெண்கள் என இரு பாலினத்தவரும் கிராமத்தில் வசித்து வருகின்றனர். 

இது நகரத்தின் பெயர் என்ன? அவர்கள் எதற்காக இப்படி உள்ளனர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

ஆடை அணியாத மக்கள்.. முழு நிர்வாணம்.. விசித்திர கிராமம் !

பிரிட்டனில் ஹெர்ட்போர்ட்ஷையர் என்ற நகரம் உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்தின் பெயர் தான் ஸ்பீல்ப்ளாட்ஸ் என்று பெயர். ஸ்பீல்ப்ளாட்ஸ் என்பது விளையாட்டு மைதானம் எனவும் பொருள்படும். 

இது மர்மங்கள் நிறைந்த கிராமமாகும். நீண்ட காலமாக வெளியுலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது. இங்குள்ள மக்கள் 90 ஆண்டுகளாக ஆடை அணிவதில்லை. 

ஆடை அணிவது இல்லை என்றவுடன் துணி வாங்க பணம் இல்லை என நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் இவர்களுக்கு போதுமான அளவுக்கும், ஆடம்பரமான ஆடைகள் வாங்கவும் வசதி இருந்தாலும் கூட அவர்கள் அதனை வாங்குவது இல்லை. 

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் ஆடைகள் அணியாமல் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் நவீன வசதிகள் உள்ளன. 

பெரிய பெரிய வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் நீச்சல் குளம், மதுக்கடை உள்பட பல சொகுசு வசதிகள் உள்ளன. மேலும் கிராமத்தில் ரூ.78.6 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள 2 படுக்கை யறைகளுடன் கொண்ட பெரிய பங்களாக்கள் உள்ளன.

இந்த கிராமத்தில் கடந்த 90 ஆண்டுகளாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது இங்கு பாரம்பரிய மரபாக உள்ளது. இந்த மரபு இன்றும் கூட பின்பற்றப்படுவது உங்களுக்கு ஆச்சரிய மளிக்கலாம். 

இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தை கடந்த 1929ம் ஆண்டில் சார்லஸ் மெக்காஸ்கி என்பவர் உருவாக்கினார். 

அப்போது இயற்கையான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார். 

மேலும் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து தான் மக்கள் ஆடைகள் அணியாமல் இருப்பதை மரபாக பின்பற்றி வருகின்றனர்.

இதுபற்றி சார்லஸ் மெக்காஸ்கியின் மகன் ஐசெல்ட் ரிச்சர்ட்டன் கூறுகையில், கடவுள் நம்மை ஆடையின்றி உலகில் படைத்தார். இதனால் நாம் ஏன் ஆடை அணிய வேண்டும். இயற்கையான வாழ்க்கையே இன்பமானதாகும் என கூறியுள்ளார். 

ஆடை அணியாத மக்கள்.. முழு நிர்வாணம்.. விசித்திர கிராமம் !

இந்த கிராமத்தைப் பற்றி பல திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் எடுக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய விசித்திரமான கிராமத்துக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். 

தபால் காரர்கள், டெலிவரி பாய்கள் தினசரி வந்து செல்கின்றனர். இருப்பினும் அவர்களும் நிர்வாணமாக கிராமத்தில் வலம் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

இதனால் சிலர் இந்த விசித்திர மக்களின் வாழ்க்கை முறையை பார்க்க கிராமங்களுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings