இந்தியாவில் உள்ள உலகபுகழ் பெற்ற மற்றும் வரலாறுகளில் உள்ள ஒரு முக்கியமான இடமாக இருப்பது இந்த தாஜ்மஹால். இது இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுளா தளமாகவும் இருந்து வருகிறது.
இந்த தாஜ்மஹால் எவ்வாறு கட்டப்பட்டது. இதற்கு பின்னாடி இருக்கும் ரகசியங்களும் கட்டுகதைகளும் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம் !
ஷாஜகான் வரலாறு
இந்த காதலின் சின்னமான தாஜ்மாகாலை கட்டிய ஷாஜகான் இவர் சலீம் மற்றும் ஜகத் கோ சையனி என்பவருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார. ஷாஜகானின் இயற்பெயர் குர்ரம் ஆகும்.
இவரது தாத்தாவான அக்பர் இவருக்கு சிறுவயதிலேயே சிறந்த போர் பயிற்சியாளராகவும் அரச தந்திரத்தையும் கற்று கொடுத்தார்.
இவர் 13 வயது இருக்கும் போது இவரது தந்தைக்கு ஐஹாங்கீர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குபின் அவர் மன்னராக்கப் பட்டார்.
மும்தாஜின் வரலாறு
மும்தாஜ் தனது 38 வது வயதில் தன்னுடைய 14 வது குழந்தையை பெற்றெடுக்கம் போது இறந்தார் . இந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் தான் மும்தாஜ்க்கு அழகிய பளுங்கு கற்களால் ஆன தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான்.
மும்தாஜ் இறந்த உடனே புருகன் என்ற ஊரில் அவரின் உடலை அடக்கம் செய்தார் அதன் பிறகுதான் ஆக்ராவில் மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டவே ஆரம்பித்தார்.
சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?
தாஜ்மஹாலின் மர்மங்கள்
தாஜ்மஹாலில் இருக்க கூடிய மிகப்பெரிய மர்மமாக மக்களால் கருதபடுவது தாஜ்மஹாலில் இருக்க கூடிய இரகசிய அரை, இந்த அரை உண்மையில் உள்ளதா என்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.
ஆனால் அந்த இரகசிய அரை இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.
அவை என்ன வென்றால் தாஜ்மாஹாலின் நுழைவாயிலில் மூடப்பட்ட பாதாள கிணறு போன்ற ஒன்றை காணலாம். இது அந்த இரகசிய அரைக்கு போகும் வழி என்று கூறப்படுகிறது.
தாஹ்மஹால் பாதாள அரை
இப்படி ஒரு மர்ம கதவு ஒன்று இருப்பதை 1974-ஆம் ஆண்டு மார்வின் மில்ஸ் என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலமாக இது உண்மையென நிரூபித்தார், இந்த கதவு தற்போது செங்கற்களால் சிமெண்ட் வைத்து அடைக்க பட்டுள்ளது.
இந்த கதவு வழியாக பாதாள அறைக்கு செல்லலாம் என்றும் இந்த பாதாள அறையில் மும்தாஜ் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைடூரிய ஆபரணங்களும் மற்றும் பெரும் செல்வமும் அங்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?
தாஜ்மஹாலுக்கு முன்பே கட்டபட்ட கட்டிடம்
இந்த கதவில் கிடைத்த பகுதிகளை வைத்து ஆய்வு செய்த போது இது தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே 250 ஆண்டுகளுக்கு முன்பே கட்டபட்டது தாஜ்மஹாலை சுற்றியுள்ள கட்டிடங்களும் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே கட்டபட்டது ஆகும்.
ஆனால் தாஜ்மஹால் கட்டபட்ட காலகட்டத்தில் அவை வெள்ளை நிற பளுங்கு கற்களை கொண்டு புதுபித்தனர், அது மட்டுமின்றி தாஜ்மஹாலின் அடிப்பகுதி ஏற்கனவே கட்டபட்டது என்றும் அதன் மேல்தான் தாஜ்மஹால் கட்டபட்டது என்றும் கூறப்படுகிறது.
தாஜ்மஹால் சுரங்கபாதை மர்மங்கள்
இதனை ஆக்ரா கோட்டை என்று கூறுவர் இது முன்பு படல்கார்க் என்று அழைக்கப் பட்டது. இந்த கோட்டையிலும் ஒரு இரகசிய சுரங்கபாதை இருப்பதும் தெரிய வந்தது.
எனவே இந்த கோட்டையும் தாஜ்மஹாலும் இணைக்க பட்டுள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.
என்ன தான் இந்த தாஜ்மஹாலை சுற்றி நிறைய கதைகளை மக்கள் கூறினாலும் அவற்றிற்கான தெளிவான ஆதாரங்கள் இன்று வரை கிடைக்க வில்லை மர்ம கதவு மற்றும் பாதாள அறை போன்றவை இன்றும் கட்டு கதைகளாகவே உள்ளன.
தாஜ்மஹால் கட்டிடகலை
அது என்ன வென்றால் தாஜ்மஹால் மும்தாஹின் குணம் அழகு போன்றவற்றை பறை சாற்றும்படி இருக்க வேண்டும் என கூறி கட்டிட கலைஞரிடம் சிறப்பாக கட்டிடம் அமைய வேண்டும் என்று கூறினார் ஷாஜஹான்.
இந்த கட்டிட கலை வல்லுநர்கள் கட்டிட கலை மட்டுமின்றி வானிலை பற்றியும் தெரிந்திரிந்தவர்கள் இவர்கள் கால நிலைக்கு ஏற்றபடி கட்டிடங்கள் கட்டுவர்.
அதன்படி ஆக்காராவில் தாஜ்மகால் கட்டுவதற்கு ஏற்ற இடமா சரியான கால நிலையையும் யமுனை நதி கரையில் கட்டலாமா என பலவற்றை ஆராய்ந்த பிறகுதான் கட்டவே ஆரம்பித்தனர்.
இந்த ஆக்ரா கரையில் ஒரு இடத்தில் ஆழமாக தோண்டப்பட்டு மரதூண்கள் அடியில் மிகவும் கடினமாக இருக்கும்படி யமுனை ஆற்றின் உப்பை தாங்கும் அளவிற்கும் கடினமான தூண்களை அடியில் வைத்தனர்.
சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?
இதனுடன் சில கற்களையும் வைத்தனர். இது எதற்கென்றால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தாலும் தாஜ்மஹால் ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தாஜ்மஹால் அடியில் கடினமான தூண்களை வைத்துள்ளனர்.
இதற்கு மேல் தான் தாஜ்கஹால் தளம் அமைக்கப் படுகிறது. இந்த தாஜ்மஹால் வெண்மையாக இருக்க காரணம் இது மும்தாஜின் குணத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அழகை பிரதிபலிக்கும் வகையிலும் உலகில் பல இடங்களி லிருந்தும் விலை மதிப்பில்லாத கற்கள் வரவழைக்கப் பட்டது.
இதில் சீனா, திபெத், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளிலிருந்து பலவண்ண கற்கள் வரவழைக்கப் பட்டது. இந்த வர்த்தகத்திற்கு ஆயிர கணக்கில் குதிரை யானைகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.
தாஜ்மஹால் கட்டுவதற்கு பல கற்கள் பயன்படுத்தினர் இதில் பூக்கள் போன்ற பளுங்கு கற்கள் தாஜ்மஹால் சுவர்களில் பொறிக்கப் பட்டிருக்கும்.
இந்த பூக்களை செதுக்க இத்தாலியில் உள்ள கலை வள்ளுநர்கள் வரவழைக்கப் பட்டன். இந்த தாஜ்மஹாலில் வெளிபுறத்தில் 4 தூண்கள் கட்டப் பட்டுள்ளத்து. இந்த 4 தூண்கள் வெளிப்புறமாக சாய்ந்தது போல் காணப்படும்.
இது ஏன் இவ்வாறு கட்டப்பட்டுள்ள தென்றால் இயற்கை சீற்றத்தால் இந்த தூண் தாஜ்மஹால் மீது விழாமல் இருக்க வெளிப்புறம் சாய்ந்த மாதிரி கட்டப் பட்டுள்ளது. இதன் மையத்தில் ஒரு தங்க கோபுரமும் வைக்கப் பட்டுள்ளது.
இந்த தாஜ்மஹால் 1653ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது .
தாஜ்மஹால் கட்டுகதைகள்
உண்மையில் ஷாஜகான் தாஜ்கஹால் கட்டிய கட்டிட வல்லுநர்களுக்கு அவர்கள் வாழ்நாளுக்கு தேவையான அனைத்து செல்வங்ளை கொடுத்து இனி எந்த கட்டிட வேலையும் செய்ய கூடாது.
மற்றும் இது போன்ற தாஜ்மஹால் கட்ட கூடாது என நிபந்தனை மட்டுமே வாங்கி இருந்தார். தாஜ்மஹால் பாதி கட்டப் பட்டிருக்கும் போது மும்தாஜ் உடல் புர்கான் இடத்திலிருந்து தாஜ்மஹால் கட்டபட்டிருக்கும் தோட்டதில் புதைத்தனர்.
பிறகு தாஜ்மஹால் முழுமையாக கட்டி முடித்த பிறகு தோட்டத்தில் உள்ள மும்தாஜ் உடலை தாஜ்மஹால் அடியில் வைத்தனர். இவ்வாறு மும்தாஜ் உடலை மூன்று முறை எடுத்து அடக்கம் செய்துள்ளனர்.
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals
ஷாஜகான் இறப்பு
ஷாஜகான் தனது பெறும் பொழுதை தாஜ்மஹாலில் தான் கழித்தார். இவரின் இறப்பு இவருடைய மகனாலே ஏற்பட்டது. இவருடைய மகன் ஔரங்கஷீப் ஆல் நடந்தது.
இவருடைய கடைசி ஆசை கேட்கும் போது இவர் தாஜ்மஹால் பார்க்கும் படியே இருக்க வேண்டும் என்று கூறி தாஜ்மஹால் பார்க்கும்படி உள்ள சிறையில் அடைக்கப் பட்டார்.
இவர் இறக்கும் போது கூட தாஜ்மஹாலை பார்த்து கொண்டே இறந்தார் கடைசியில் மும்தாஜ் என்றுகூறியே இறந்தார். இறுதியில் மும்தாஜ் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
தாஜ்மஹாலும் ஆங்கிலேயரும்
இதற்கு பின் தாஜ்மஹால் பல சேதாரத்திற்கு உள்ளானது. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து பல சேதாரத்தை ஏற்படுத்தினர். தாஜ்மஹால் தங்க கோபுரத்தை எடுத்து பித்தளையாக மாற்றினர்.
இந்த ஆங்கிலேயர்களால் பல விலைமதிப்பான கற்கள் திருடப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக தாஜ்மஹால் கோபுரம் மூங்கில் கம்புகளாக மறைக்கப்பட்டது.
இதில் எந்த சிவன் கோவிலும் இல்லை என நிரூபிக்கப் பட்டது. ஆனால் பலரும் இன்றும் அங்கு சிவன் கோவில் உள்ளதாக நம்புகின்றனர் என்பது நம்மையே சற்று வியப்பில் ஆழ்த்துகிறது.
பல இயற்கை சீற்றத்தாலும் மற்றும் பூமி மாசுபடுவதாலும் தாஜ்மஹால் பாதிக்கபட்டு வருகிறது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஒளி மாசால் தாஜ்மஹால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது .
ஒரு தனி மனிதனின் அளவுகடந்த காதல் எந்த அளவிற்கு வலிமையானது என்பதை இந்த தாஜ்மஹால் நமக்கு உணர்த்துகிறது.
Thanks for Your Comments