உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்த செல்வகுமார்.. ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலி !

0

ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் 28 வயதான செல்வகுமார். லாரி டிரைவரான இவருக்கு கவுசல்யா என்ற பெண் ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.

உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்த செல்வகுமார்.. ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலி !

ஆனால் திருமணமான ஒரே வருடத்தில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து விட்டனர். 

இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் கல்பனா என்ற பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு தற்போது ஒரு மகள் உள்ளார்.

பொரி சாட் மசாலா தயார் செய்வது எப்படி?

இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கும் தெக்கோட்டு வாய்க்காலை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இளம்பெண் செல்வகுமாருடன் உல்லாசமாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வகுமார் தனது கள்ளக் காதலியிடம் பேசுவதை நிறுத்தி யுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலி, இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார். 

இதனால் பயந்து போன, அவர் ரூ.1.50 லட்சத்தை இளம் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் அவரது கள்ளக்காதலி, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

இதனால் மன விரக்தி அடைந்த செல்வகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சம்பவம் குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், செல்வகுமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் தனக்கு அவரது கள்ளக் காதலியால் நேர்ந்த சம்பவம் குறித்து எழுதி இருந்துள்ளார். 

இதையடுத்து, போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !