ஐஸ்வர்யா மகளின் ஸ்கூல் பீஸ் எவ்ளோ தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க !

0

பிரபல நட்சத்திர தம்பதி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் கல்விக் கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா மகளின் ஸ்கூல் பீஸ் எவ்ளோ தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க !
அதிக கட்டணம் வசூலிக்கப்படும் மிகப்பெரிய பள்ளிகளில் சிறந்த கல்வி கிடைக்கும் என்பது தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. 

எனவே எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடன் வாங்கியாவது பிள்ளைகளை சர்வதேச பள்ளிகளில் சேர்க்கும் பல பெற்றோர்கள் உள்ளனர். சாதாரண நடுத்தர வர்க்க மக்களே இப்படி நினைக்கும் போது பிரபலங்களை பற்றி சொல்லவா வேண்டும்.

அந்த வகையில் பிரபல நட்சத்திர தம்பதி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் கல்விக்கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான பள்ளி ஒன்றில் தான் ஆராத்யா படிக்கிறார். சிலருக்கு அந்த பள்ளி பற்றி தெரிந்திருக்கும். 

உடல் வலியில் இருந்து நிவாரணம் தரும் கண்டதிப்பிலி ரசம் ! 

ஆம். அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தான் ஐஸ்வர்யாவின் மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எல்.கே.ஜி முதல் ஆராத்யா அந்த பள்ளியில் தான் படித்து வருகிறார். அந்த பள்ளியில் ரூ.1.70 லட்சம் மாதக்கட்டணம் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா  ராய் – அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 

ஐஸ்வர்யா மகளின் ஸ்கூல் பீஸ் எவ்ளோ தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க !

இவர்களின் மகள் 2011-ம் ஆண்டில் பிறந்தார். ஐஸ்வர்யா தமிழ், ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும், அண்மையில் வெளியான வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராத்யா மட்டுமின்றி, பல்வேறு பாலிவுட் பிரபலங்களின் பிள்ளைகளும் இந்த பள்ளியில் படித்தவர்கள் தான். ஷாருக்கான் – கௌரி கான் பிள்ளைகளான அப்ராம் கான், சுஹானா கான் இங்கு தான் படிக்கின்றனர். 

உடல் கோளாறுகளை தணிக்கும் பழங்கள் ! 

அதே போல் ஆமீர்க் கான் பிள்ளைகளும் இந்த பள்ளியில் தான் பயில்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், செயிஃப் அலி கானின் முதல் மனைவியின் மகள் சாரா அலி கான், 

சச்சின் டெண்டுல்கர் சாரா டெண்டுல்கர், அஜய் தேவ்கன் – கஜோல் தம்பதி மகள் நைசா தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திர குழந்தைகளும் இங்கு பயின்றவர்கள் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings