தாத்தாவை பார்த்து திருடியதை கொடுத்த திருடன்.. மன்னித்து விடுங்கள் !

0

கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அந்த தாத்தா. 

தாத்தாவை பார்த்து திருடியதை கொடுத்த திருடன்.. மன்னித்து விடுங்கள் !
இவருக்கு 3 வயதில் ஒரு பேரக்குழந்தை இருக்கிறான். சம்பவத்தன்று இந்த தாத்தா, தன்னுடைய பேரனை அழைத்துக் கொண்டு கடைக்கு போனார். அப்போது பேரனின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி திடீரென மாயமானது. 

இதைப் பார்த்ததுமே தாத்தா அதிர்ச்சி அடைந்து விட்டார். தன்னுடன் பேரன் இருக்கும் போது, இந்த திருட்டு சம்பவம் நடந்து விட்டதே என்று கலங்கினார்.

விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் !

வீட்டில் தங்க செயினை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று பதறிப் போனார். ஆசை ஆசையாக பேரனை கடைக்கு அழைத்து வரும் போது தான், இப்படி நடக்க வேண்டுமா? என்று கடைத் தெருவிலேயே தவியாய் தவித்தார்.

பிறகு, பேரனை கையில் பிடித்துக் கொண்டே, தங்கச் சங்கிலியை தேடி, அதே ரோட்டில் அலைந்து திரிந்தார். செயின் யார் திருடினார்கள் என்றே தெரியவில்லை. 

இதனால், வேறு வழியில்லாமல் போலீசுக்கு சென்று புகார் தந்தார். தன்னுடைய வீட்டிற்கும் சென்று, நகை திருடு போனதை பற்றி கண்ணீருடன் சொன்னார். 

உடனே குடும்பத்தாரும், தாத்தாவுடன் சேர்ந்து, அந்த கடைத்தெரு பகுதிகளில் நகை திருடனையும், நகையையும் தேட துவங்கினர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர்கள் வீட்டின் கிச்சன் ஜன்னலில், ஒரு கவரும், ஒரு கடிதமும் இருப்பதை கண்டுள்ளனர். அந்த கவரில் 55 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. அந்த கடிதம், தாத்தாவுக்கு எழுதப் பட்டிருந்தது.

தாத்தாவை பார்த்து திருடியதை கொடுத்த திருடன்.. மன்னித்து விடுங்கள் !

கடைத்தெருவில் உங்க பேரன் கழுத்திலிருந்த செயினை திருடியது நான் தான். ஆனால், திருடியதுமே, அந்த செயினை கொண்டு போய் விற்று விட்டேன். 

திரும்பி வந்து பார்த்த போது, நீங்க செயினை தேடி கண்ணீருடன் அலைந்து திரிவதை பார்த்தேன். என்னால் அதை தாங்கவே முடியல. குற்ற உணர்வு என்னை வாட்டி எடுத்தது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

மரபணு உணவுப் பொருளை கண்டறிவது எப்படி?

மகிழ்ச்சி: அதனால், அந்த செயினை விற்ற பணம் மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை, அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். இந்த மன்னிப்பு கடிதத்துடன் வைத்துள்ளதை எடுத்துக் கொள்ளவும். 

என்னையும் மன்னித்து விடுங்கள் என்று எழுதியிருந்தது. இந்த கடிதத்தை பார்த்ததுமே குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்த தாத்தா, ஆனந்தக் கண்ணீரை வடித்து கொண்டிருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)