ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?

0

வாரிசுகளுக்கு சொத்தை சமமாக பங்கிட்டுக் கொடுப்பது என்பது ஒரு சிலவகை சொத்துக்களில் மிக எளிமையானதாகவே இருக்கும். 

ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?
உதாரணமாக உங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம், முதலீடுகள், பங்குகள் உள்ளிட்டவற்றைக் கூறலாம். இவற்றை உங்களுக்கு இரண்டு வாரிசுகள் இருந்தால், இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கலாம். 

மூன்று பேர் இருந்தால் மூன்று பேருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கலாம். சொத்து பங்கீடு மிகவும் சுலபமாக முடிந்து விடும்.

ஆனால், சில வகை சொத்துக்களை, வாரிசுகளுக்கு எப்படி சமமாக பிரித்து எழுதுவது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். உயில் எழுதாமல் சென்றால் அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். 

அதே நேரத்தில், உயில் எழுதுவதும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. குறிப்பாக ஒரே ஒரு சொத்து அதாவது ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது, 

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா? 

ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தை எப்படி பிரிப்பது? 

உதாரணமாக ஒரு வாரிசு உள்ளூரில் வசிக்கிறார், மற்றொருவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த சொத்தின் மதிப்பு மிகவும் அதிகம். 

(nextPage)

இந்த சூழ்நிலையில் அந்த அசையா சொத்தை இரண்டு வாரிசுகளுக்கும் எப்படி சமமாக பிரிப்பது?

ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?

ஒரு வீட்டை பாதி பாதியாக உடைத்து குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா? அதே போல நீங்கள் வைத்திருக்கும் விலைமதிப்புள்ள உபகரணங்கள், ஆபரணங்கள், ஓவியங்கள், 

கலைப் பொருட்கள் உள்ளிட்ட வற்றையும் கூறலாம். உதாரணமாக பழங்கால நகைகள் மற்றும் பழங்கால பொருட்களை, அதனுடைய மதிப்பை அளவிடுவது மிகவும் கடினம்.

உடலில் மிகவும் அழுக்கான இடம் தெரியுமா?

இவ்வாறான சூழலில் என்ன செய்யலாம்?

இரண்டு வீடுகள் இருந்தால், அதை இரண்டு வாரிசுகளுக்கும் உயில் எழுதி கொடுத்து விடலாம். ஆனால், இருப்பதே ஒன்று, அதை எப்படி பிரிப்பது?

நிபுணர்களின் கருத்துப்படி ஒரு வாரிசு வெளிநாட்டில் வசிக்கும் பொழுது அவருக்கு தந்தையின் அல்லது பூர்வீக சொத்தின் மீது பெரிதாக ஆர்வம் இருக்காது. 

உதாரணமாக வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் இந்தியாவில் இருக்கும் சொத்தை தன் பெயரில் வாங்கிக் கொண்டால் அந்த சொத்தையோ அல்லது வீட்டையோ முறையாக பராமரிக்க வேண்டும், வரி செலுத்த வேண்டும். 

வாடகைக்கு விட்டால் கூட எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது போன்ற பலவிதமான பொறுப்புகள் உள்ளன. எனவே இவ்வாறு இந்தியாவில் வசிக்காத நபர் சொத்து எழுதி வாங்கிக் கொண்டால் கூட அதை பற்றி அவர் வருத்தப்படுவார். 

அது கூடுதல் பளுவாக இருக்கும். எனவே ஒரு வாரிசு இந்தியாவி லிருந்து மற்றொரு வாரிசு வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில், உள்நாட்டில் வசிப்பவருக்கு அசையா சொத்தையம், 

வெளிநாட்டில் வசிப்பவருக்கு ஃபினான்சியல் அசெட்ஸ் என்று கூறப்படும் வங்கி கணக்கு, பங்குகள் உள்ளிட்ட வற்றையும் வழங்கலாம்.

இன்ஹெரிடண்ட்ஸ் நீட்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் ரஜத் தத்தா 'மேலே கூறப்பட்டுள்ள முறை எல்லோருக்கும் பொருந்தாது. 

இரண்டு வாரிசுகளும் உள்நாட்டில் தான் வசிக்கின்றனர் அல்லது தந்தைக்கு அசையா சொத்து மட்டும் தான் இருக்கிறது, போதிய அளவு நிதி, பங்குகளாக, ரொக்கமாக, 

முதலீடுகளாக இல்லை என்னும் பட்சத்தில் அசையா சொத்தை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் தொகையை இரண்டு வாரிசுகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.

அசையா சொத்துக்கள் இருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளர் தன்னுடைய வாரிசுகள் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று மட்டும் உயில் எழுதிவிடக் கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அதாவது ஒரு சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்குமாறு உயிலை பிரித்து எழுதவே கூடாது.

சொத்தை பிள்ளைகளுக்காக சமமாகப் பிரித்துக் கொடுப்பவர், தன்னுடைய பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் சண்டை போட மாட்டார்கள் என்று நோக்கத்தில் தான் இவ்வாறு செய்யக்கூடும். ஆனால் எப்போதுமே இணக்கமான சூழல் இருக்காது.

ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பொழுது, ஒரு பிள்ளை அந்த வீட்டில் வாழ விரும்புவார். 

ஒருவர் அதை வாடகைக்கு விட விரும்பலாம், மற்றொருவர் வேறொரு சூழலில் அந்த வீட்டை விற்பனை செய்து ரொக்கமாக பணத்தை பெற விரும்பலாம். 

எனவே இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு கோ-ஓனர்ஷிப் என்று கூறப்படும் சொத்துகள், வீடு என்று தன்னுடைய பிள்ளைகளுக்கு சமமாக பங்கிட வேண்டும் என்பதை மட்டும் உயிலில் குறிப்பிடக்கூடாது.

(nextPage)

ஒரு வீட்டை எப்படி இரண்டு அல்லது மூன்று பங்குகளாக, சொத்தாகவே பிரித்துக் கொள்ள முடியும்? 

ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?

வீட்டின் முன்பகுதி முதல் பிள்ளைக்கு, நடுப்பகுதி இரண்டாம் பிள்ளைக்கு, பின்பகுதி மூன்றாம் பிள்ளைக்கு என்று நடைமுறைப்படி பிரிக்க முடியாதே! எனவே இது போல பிரிப்பது எப்பொழுதுமே பிரச்சனையை தான் ஏற்படுத்தும்.

திருமணமாகாத மற்றும் விவாகரத்தான பிள்ளை: 

சொத்துப் பங்கீடு என்று வரும்போது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சூழல் இருக்காது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும் பொழுது, எல்லா வாரிசுகளும் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருப்பார்கள், வசதியாக வாழ்வார்கள் என்று உறுதி செய்ய முடியாது. 

எனவே ஒரு நபர் இறந்து போகும் பட்சத்தில் அந்த சொத்து அவருடைய கணவர் அல்லது மனைவி, திருமணமாகாத வாரிசு மற்றும் திருமணமாகி விவாகரத்தான வாரிசு உள்ளிட்ட வர்களுக்கு சமமாக செல்ல வேண்டும் என்பதை சொத்தின் உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.

உதாரணமாக ஒரு நபருக்கு மிக பெரிய வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டில் அவரை கவனித்துக் கொள்ள அவரது மனைவி, திருமணமாகாத அல்லது விவாகரத்தான ஒரு வாரிசுடன் இருக்கிறார். 

அந்த நபர் இறந்த பிறகு அந்த வீட்டை விற்று அதில் கிடைக்கும் தொகையை அனைவரும் சமமாக பங்கீடு செய்ய வேண்டும் என்பது சட்டப்படி சரியானது தான். 

நான் 7 மாச கர்ப்பம் அதனால் தான் இப்படி - அதிர்ந்த போலீஸ் !

ஆனால், அவருடன் உங்களுடன் பல ஆண்டுகளாக வசித்து, பராமரித்து வந்த அந்த வாரிசின் நிலை? தனக்கென்று மற்றொரு இடத்தை உருவாக்கிக் கொள்ளும் வரை அந்த வீட்டில் வசிப்பதற்கு உரிமை அளிக்க வேண்டும்.

அதேபோல இறந்த நபரின் கணவன் அல்லது மனைவிக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும். சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டார். 

எனவே உடனடியாக அதை விற்று பணத்தை பிரித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எப்போதுமே எடுக்கக் கூடாது. 

ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?

ஆனால் இதில் கூட உரிமையாளருக்கு வேறு சொத்துக்கள் இருந்தால் தன்னை கவனித்துக் கொண்ட வாழ்க்கைத் துணை மற்றும் வாரிசுக்கு அந்த சொத்தை எழுதி வைத்து மற்ற சொத்துக்களை வேறு வாரிசுக்கு எழுதி வைப்பது சொத்தின் உரிமையாளருடன் தனிப்பட்ட விருப்பம்.

இதில் பெரும்பாலான நபர்கள் தங்களுடைய அசையா சொத்துக்களை வாரிசுகளுக்கு தான் விட்டுச் செல்கிறார்கள், தன்னுடைய கணவன் அல்லது மனைவியைப் பற்றி முழுவதுமாக மறந்து விடுகிறார்கள். 

அதே போல கணவன் அல்லது மனைவி இருவரும் சேர்ந்து வாங்கி யிருக்கும் ஒரு சொத்தில், அதை அப்படியே குழந்தைகளுக்கு அடுத்த தலைமுறைக்கு செல்லும் என்பதை குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் எப்பொழுதுமே தம்பதிகள் ஒரே நேரத்தில் பெரும்பாலும் இறந்து போவதில்லை. அத்தகைய சூழலில் இந்த பிரச்சனை வருகிறது. 

ஆணுறுப்பு கடவுளை வழிபட்ட பெண்கள் - உலகின் விசித்திரமான கடவுள்கள் !

அப்பா தான் இறந்த பின்னர், தனது பிள்ளைகளுக்குத் தான் சொத்து என்று உயில் எழுதி இருந்தால், அம்மாவின் நிலை முதியோர் இல்லம் தான். அதே போலத்தான் விவாகரத்தான ஒரு வாரிசு வேற ஆதரவு ஏதும் இல்லாமல் பெற்றோருடன் வாழ்ந்து வரலாம். 

பல ஆண்டுகளாக அவ்வாறு இருக்கும் பொழுது அத்தகைய வாரிசுக்கு சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகும் அந்த வீட்டில் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்பதை உயிலில் குறிப்பிடலாம். 

இவ்வாறு செய்யும் பொழுது தன்னை சார்ந்திருக்கும் வாரிசு மற்றும் வாழ்க்கைத் துணைக்கு போதிய அளவு பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

(nextPage)

வாரிசுகளுடன் பேசி முடிவு செய்தல்:

ஒரே சொத்து... பல வாரிசு... சொத்துக்களை சமமாக பங்கிடுவது எப்படி?

சொத்துப் பங்கீடு விவரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், பொருளாதார நிபுணர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருமே வாரிசுகளுடன் வெளிப்படையாக சொத்து பங்கீடு பற்றி பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 

அவர்களுக்கு வீடு வேண்டுமா அல்லது வீட்டை விற்றால் அதிலிருக்கும் கிடைக்கும் பணம் வேண்டுமா என்பதைப் பற்றி சொத்து பங்கீடு செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்வது அவசியம்.

உதாரணமாக ஒரு சிலர் வீடு வீட்டை பெற்றுக் கொண்டு அதை சுற்றுலா வாசிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம் அல்லது உணவகம் துவங்கலாம். ஒரு சிலர் சொத்தாக பெற்றுக் கொள்ள விரும்ப மாட்டார்கள். 

பணமாக கிடைத்தால் தாங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் சொத்தை வாங்கிக் கொள்ளலாம் அல்லது முதலீடு செய்யலாம் என்று நினைப்பார்கள். 

வாரிசுகள் என்ன விரும்புகிறார்கள் மற்றும் எதை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)