இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் உணவருந்தலாம்.. பாகிஸ்தான் நடிகை !

0

இந்தியாவிற்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் தன்னுடன் அமர்ந்து உணவருந்தலாம் என்று பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி கூறியுள்ளார்.

இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் உணவருந்தலாம்.. பாகிஸ்தான் நடிகை !
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடந்த 15 போட்டிகளில் இந்தியா விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

நியூசிலாந்து விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 3ஆவது இடத்தில் உள்ளது. 

பெண் என்றால் மனைவி மட்டும் தானா?

பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது. அதன் பிறகு இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. 

இதில் இலங்கையைத் தவிர மற்ற அணிகள் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 5 முதல் 9 இடங்களை வரை பிடித்துள்ளன. இலங்கை மட்டும் இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தான் நாளை 19 ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. 

இதுவரையில் இரு அணிகளும் விளையாடிய 4 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணி ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. 

அதுவும், கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன் பிறகு 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா முறையே 87, 109 மற்றும் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 

தற்போது இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் என்று பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்து இந்தியா அணி நல்ல பார்மில் உள்ளது. 

அப்படி யிருக்கும் போது நாளை நடக்க உள்ள போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் நடிகை ஒருவர் இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறியிருக்கிறார். 

திருமணம் முடிக்கப் போகும், கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களுக்கு !

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது : 

இந்தியாவிற்கு எதிரான முந்தைய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து, ஷின்வாரி தனது டுவீட்டில் வங்கதேச கிரிக்கெட் அணி நாளை நடக்கும் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், அடுத்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை வெல்ல முடிந்தால் டாக்காவில் தன்னுடன் இணைந்து மீன் குழம்பு உணவை சாப்பிட ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings