வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் வடிவேலு. இன்று அவரது 63வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளையொட்டி, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வாழ்க்கை நடத்த மக்கள் பிஸியாக டென்ஷனாக ஓடிக் கொண்டிருப்ப வர்களின் முகத்தில் சிரிப்பை வர வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.  

அப்படி டென்ஷனாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தனது காமெடி காட்சிகள் மூலம் இருந்தவர் தான் வடிவேலு. சிரிக்க வேண்டும் இவர் உள்ளார், மீம்ஸ் கிரியேட் செய்யனுமா வடிவேலு இருப்பார். 

இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில் மாமன்னன் படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் என்ன?

வடிவேலுவுடன் நடித்த நடிகர்களும் அவரை வைத்து படம் தயாரித்த நிறுவனங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இணைய தளங்களில் புகைப்படம், வீடியோ பதிவிட்டு வருகின்றன. 

மேலும் அவரைக் கொண்டாடும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் பலவித மீம்களை தயார் செய்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளது.

வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கோடி என்றும் இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோடோ என 4 சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். அதே போல் இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் சிலமும் உள்ளதாம். இவற்றின் மதிப்பு ரூ. 86 கோடி.

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

இப்படி நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மட்டுமே சுமார் ரூ. 130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. வடிவேலு தனது இளமைக் காலத்திலிருந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை. 

அவருக்கு பெரும் வருமானத்தைக் கொடுத்த படங்கள் என்றால் அது வின்னர் படத்துக்கு பிறகான படங்கள் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings