சிறுத்தையை பூனை என்று வளர்த்த பெண்... வினோதம் !

1

சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக பத்திரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

சிறுத்தையை பூனை என்று வளர்த்த பெண்... வினோதம் !
சைபீரியா காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டு, தன்னந்தனியாக கிடந்த பூனை குட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளார் விக்டோரியோ. 

இங்கேயே விட்டு சென்றால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று நினைத்த விக்டோரியா, சாதாரண பூனைக்குட்டி தானே என தன் வீட்டிற்கே எடுத்துச் சென்றுள்ளார். 

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது? தெரியுமா?

அது பூனை குட்டி அல்ல, சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்ற பெயருடைய கருஞ்சிறுத்தை குட்டி என்று அப்போது அவருக்கு தெரியாது.

நாளடைவில் லூனாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காண தொடங்கியதும், மெல்ல, மெல்ல அதன் உண்மையான சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. 

இருந்தாலும், அதன் மீது கொண்ட பாசத்தால் கருஞ்சிறுத்தை என்று தெரிந்த பிறகும் அதைவிட்டு பிரியாமல் இருந்தார் விக்டோரியா. 

இதற்கென்றே டிக் டாக்கில் @Luna_the_pantera என்ற பெயரில் கணக்கை தொடங்கி, கருஞ்சிறுத்தை குட்டியின் அன்றாட செயல்பாடுகளை பதிவிட்டு வந்தார். 

இவர் பதிவிடும் கருஞ்சிறுத்தை குட்டி வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். லூனா எவ்வுளவு தான் அழகாக இருந்தாலும், அது ஒரு வனவிலங்கு என்பதையும் எந்த நேரத்தில் அது எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. 

இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக பராமரிக்கா விட்டால், சக்தி வாய்ந்த அதன் உடலமைப்பும், கூர்மையான பற்களும் எந்த சமயத்திலும் ஆபத்தை விளைவிக்கலாம். 

ஆனால் சிறு வயதில் இருந்தே வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக இருக்கிறது லூனா.

இதே போல் இன்னொரு சம்பவம் ஒன்றும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீன குடும்பம் ஒன்று நாய்க்குட்டி என நினைத்து இவ்வுளவு நாளும் கரடி ஒன்றை வீட்டில் வளர்த்திருக்கிறார்கள். 

யுனான் மாகாணத்தில் வசித்து வரும் சூ யூன், 2016-ம் ஆண்டு சுற்றுலா சென்ற போது திபெத்திய மஸ்திஃப் நாயினம் என நினைத்து நாய்க்குட்டி ஒன்றை வாங்கி யிருக்கிறார். 

அழகைப் பேண பாலூட்டுவதை நிறுத்தலாமா?

இந்த Tibetan mastiffs நாய்கள் அளவில் பெரியதாக இருப்பதோடு கருமை நிற தோலுடையது. இதன் எடை 150 கிலோ வரை இருக்கும்.

இந்த குட்டியை வாங்கிய சில நாட்களிலேயே, இரண்டு கால்களில் நடப்பது என அதன் விசித்திரமான நடத்தையால் சூவிற்கு குழப்பமும் பயமும் அதிகமானது. 

நாட்கள் செல்ல செல்ல இது நாயல்ல என்ற உண்மை அவருக்கு விளங்க ஆரம்பித்தது. குடும்பத்தின் பாதுகாப்பு கருதி உடனடியாக காவல் துறையை அழைத்தார் சூ. 

போலீசார் வந்த பிறகே, அது நாயல்ல, அரிய வகை ஆசிய கருப்பு கரடி என்ற விவரம் தெரிய வந்தது.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. சித்த வைத்தியம் எல்லோருமே லிவருக்கு தான் மருந்து கொடுக்குறார்கள் எது ஏன்?

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !