மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உதவி கேட்டு பல கிலோ மீட்டர் நடந்து சென்றும் ஒருவர் கூட உதவ முன் வரவில்லை.
இந்த நிலையில், பாஜ ஆளும் ம.பி மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உதவி கேட்டு வீடியோ சமூக வலை தளங்களில வெளியாகி மீண்டும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அருமையான மட்டன் கீமா ரொட்டி செய்வது எப்படி?
ம.பி மாநிலம் உஜ்ஜைன் நகரில் கடந்த கடந்த திங்களன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 12 வயது சிறுமி ஒருவரை உஜ்ஜைனில் சில மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் ஆடை கிழிந்து அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சிறுமியை அங்கேயே விட்டு விட்டு அந்த ஆசாமிகள் தப்பி ஓடி விட்டனர்.
மயக்கம் தெளிந்த சிறுமி அரை நிர்வாண கோலத்தில் உடலில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட தட்டு தடுமாறி எழுந்து நடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உதவி கேட்ட அந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் விரட்டி யடித்துள்ளனர்.
யாரும் உதவ முன்வராததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்ற சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் பலாத்காரம் நடந்திருப்பதை உறுதி செய்தனர். சம்பவத்தை அறிந்த போலீசார் மருத்துவ மனைக்கு விரைந்தனர்.
அப்பெண் பற்றி கேட்ட போது அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவளது மேல் சிகிச்சைக்காக இந்தூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு செவ்வாயன்று கொண்டு செல்லப் பட்டாள்.
அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதை தொடர்ந்து அந்த சிறுமியின் உடல்நிலை தேறி வருகிறது. இது குறித்து உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்த போது, அந்த சிறுமியிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை.
வெண்டைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?
அவள் தனது பெயரைக்கூட தெரிவிக்க முடியவில்லை. உ.பியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து மகாகால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி ம.பி உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்த போது, சிகிச்சைக்கு பிறகு அபாய கட்டத்தை அந்த சிறுமி கடந்து விட்டாள். இது சம்பந்தமாக ஒருவர் பிடிப்பட்டுள்ளார். தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்றார்.
சம்பவம் பற்றி ம.பி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தனது டிவிட்டர் பதிவில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும்.
12 வயது மகள் கற்பழிக்கப்பட்டு, உஜ்ஜைன் தெருக்களில் அரை நிர்வாணமாக உதவி கேட்டு அலைந்தது மனித குலத்துக்கே பெரும் அவமானம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


Thanks for Your Comments