துக்காச்சியில் அலாவுதின் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !

0

கும்பகோணம் அருகே துணிக்கடை வியாபாரி வீட்டின் மீது புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

துக்காச்சியில் அலாவுதின் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !
கும்பகோணம் அருகேயுள்ள உள்ள துக்காச்சி கிராமத்தை சேர்ந்தவர் அலாவூதின் (70). இவருக்கு சுல்தான், அப்துல் சமத் என்ற இரு மகன்கள் உள்ளனர். 

நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இவர்கள் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பக்கம் உள்ள காலி இடத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்த இடத்தில் 180 மி.லி. அளவு கொண்ட இரு மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப் பட்டுள்ளதும், திரியுடன் கூடிய ஒரு பாட்டில் மட்டும் எரிந்தும், மற்றொரு பாட்டில் எரியாமலும் கிடந்ததும் தெரிய வந்தது.

பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?

இதையடுத்து, காவல் நிலையம் சென்ற அலாவுதீன், தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, அலாவுதீன் வீட்டில் கிடந்த மது பாட்டில்கள் மற்றும் திரிக்காக பயன்படுத்தப்பட்ட செய்தித்தாளின் காகிதம் உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொண்டனர். 

மேலும், வீட்டை சுற்றிலும் வேறு ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்பதையும் ஆராய்ந்தனர். அப்போது, அலாவுதீன் வீட்டின் பின்னால், இருந்த செடிகளுக்கு இடையில் ஒரு கேனில் பெட்ரோலும், செய்தித் தாள்களையும் கண்டுபிடித்தனர். 

போலீஸார் கண்டெடுத்த இரண்டு செய்தித்தாளும் ஒரே தேதி, ஒரே நிறுவனத்தினுடையது என்பதை உறுதி செய்தனர். இதனால், சந்தேகமடைந்த அவர்கள் சுல்தான், அப்துல் சமத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

துக்காச்சியில் அலாவுதின் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !

அலாவுதீன் வீட்டின் முன்பகுதியில் இரண்டு பேர் குடியிருந்து வருகின்றனர். அவர்களை நீண்ட நாட்களாக வீட்டை காலி செய்ய சொல்லியும், அடாவடியாக அவர்கள் காலி செய்ய மறுத்தும் வந்துள்ளனர். 

இது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் சுல்தான் 2021, மே 12 ஆம் தேதி புகாா் செய்தாா். 

இந்தியாவின் முகலாயர்கள் காலத்து கண்ணாடி தலைநகரம்.. தெரியுமா?

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக சுல்தானிடமும், அருகிலுள்ள 2 குடும்பத்தினரிடமும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)