பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?

0

உதாரணமாக நீங்கள் இரு சக்கர வாகனத்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு நீண்ட தூர பயணம் செல்வதற்கு முன்னர் என்ன செய்வீர்கள்? என்று நினைத்து பாருங்கள்.

பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?
வாகனத்தின் மைலேஜ் கணக்கிட்டு எரிபொருள் டேங்க் முழுக்க நிரப்புவோம் அல்லவா? அதே கதை தான் இங்கேயும்.

பசிபிக் கடலின் பரப்பளவு பெரிங் ஜலசந்தி யிலிருந்து அண்டார்டிகா வரை அதிகபட்ச நீளம் 15,500 கிமீ மற்றும் பனாமாவிலிருந்து மலாய் தீபகற்பம் வரை அதிகபட்ச அகலம் சுமார் 17,700 கிமீ ஆகும். இதன் சராசரி ஆழம் 4,282 மீ ஆகும்.

ஒரு ஏர்பஸ் A321neo எரிபொருள் திறன் 32,940 லிட்டர். 1200 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்க (டெல்லியிலிருந்து மும்பை விமானம் என்று வைத்துக் கொள்வோம்), 

சந்திரனுக்கு பயணிப்பதற்கான முயற்சியை பற்றிய முதல் கதை !

Airbus A321neo மணிக்கு சராசரியாக 600 கிமீ வேகத்தில் பறக்கும், அதாவது நிமிடத்திற்கு 10 கிமீ. இந்த விமானம் ஒரு மணி நேரத்திற்கு 2,508 லிட்டர் எரிபொருளைச் செலவழிக்கும்.

விமானம் 192 பேர் உட்காரும் திறன் கொண்டதாகக் கருதினால், அது ஒரு கிலோ மீட்டருக்கு 4.18 லிட்டர் எரிபொருளை உறிஞ்சும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 

1200 கிலோ மீட்டர் பயணத்தில் மொத்தம் 5,016 லிட்டர் எரிபொருளைச் செலவழிக்கும். அதாவது ஒரு நொடிக்கு 0.683 லிட்டர் எரிபொருள் மற்றும் ஒரு நிமிடத்தில் 41.8 லிட்டர் எரிபொருள்.

போயிங் 747 எரிபொருள் நுகர்வு

பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?

ஒரு Airbus A321neo வினாடிக்கு 0.683 லிட்டர் எரிகிறது என்றால், போயிங் 747 ஒவ்வொரு வினாடிக்கும் தோராயமாக 4 லிட்டர்களைப் பயன்படுத்துகிறது, அதாவது நிமிடத்திற்கு 240 லிட்டர் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 14,400 லிட்டர்.

டோக்கியோவில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு 13 மணி நேர விமானத்தில், போயிங் 747 187,200 லிட்டர் எரிக்கக் கூடும். 

ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்

போயிங் வலைத்தளத்தின் படி, 747 ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 12 லிட்டர் எரிகிறது. 747 இல் 568 பேர் வரை பயணிக்க முடியும். இது 238,840 லிட்டர் எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும்.

இப்போது கணக்கிற்கு வருவோம்.

A 321 neo விமானமானது பசிபிக்கை கடக்க 29.5 மணி நேரங்களாகும்.

அதற்கு தோராயமாக 74000 லிட்டர் எரிபொருள் தேவைப்படும்.

ஆனால் விமானத்தின் கொள்ளளவு 32940 லிட்டர்மட்டுமே.

அடுத்து போயிங் 747 விமானம்.

பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?

பறக்கும் வேகம் 800 கிலோ மீட்டர்கள் ஒரு மணிக்கு என்று கணக்கிட்டால் 22 மணி நேரங்கள் தேவைப்படும். 

மணிக்கு 14400 லிட்டர் எரிபொருள் தேவையென்றால் மொத்த பயண தூரத்துக்கு சுமார் 318600 லிட்டர் எரிபொருள் வேண்டும். ஆனால் விமானத்தில் எரிபொருள் கொள்ளளவு 238840 லிட்டர் மட்டுமே.

அப்படியென்றால் மீதி பயண தூரத்துக்கு என்ன செய்ய இயலும்? கடலில் இறங்கி பெட்ரோல் போட இயலாது.  பைக்குகளில் இருப்பது போல ரிசர்வ் கிடையாது. 

பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !

அஞ்சு லிட்டர் கேன் எடுத்துக் கொண்டு வழியில் வரும் பைக்குகளில் லிப்ட் கேட்டு பெட்ரோல் பம்ப் வரைக்கும் போகவும் முடியாது. அதனால் தான் இந்த நீண்ட தூர பசிபிக் கடல் பயணத்தை விமானங்களில் தவிர்க்கின்றார்கள்.

மேலும் ஏதேனும் ஒரு அவசர கால தரை யிறக்கத்திற்கு அதிக பட்சம் ஒரு மணி நேர பயண தூரத்திலேயே ஏதேனும் ஒரு விமான நிலையம் தரை பகுதியில் அமைந்திருக்கும்.

அடுத்ததாக மோசமான கணிக்க இயலாத வானிலை மாற்றங்கள் கடலில் அடிக்கடி நிகழ்வதாலும் கடலின் மீது பாதுகாப்பான பயணத்தை எதிர் கொள்ள இயலாது.

பூமியின் மேற்கிலிருந்து கிழக்காக சுழற்சியின் காரணமாக டர்புலன்ஸ் எனப்படும் காற்றின் அதிக வேக ஓட்டம் கடலின் மேல் தடையின்றி விசையுடன் இருக்கும் காரணத்தாலும், 

மேற்கிலிருந்து கிழக்காக செல்லும் போது சுலபமாகவும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் போது கடினமாகவும் பயணமானது இருக்கும். 

இது போன்ற வலிமையான காரணிகளால் பசிபிக்கின் மேல் விமானங்கள் பறப்பதை பெரும்பாலும் தவிர்க்கின்றார்கள்.

அடுத்து இமயமலை : .

பசிபிக் மற்றும் எவரெஸ்ட் மேல் விமானம் பறப்பதில்லை ஏன்?

அதிக பட்சமாக உயரத்தில் இருக்கும் அதன் சிகரங்களுக்கு இடையில் பறப்பதுவும், எளிதில் இறங்க இயலாத சூழ்நிலைகளும் காரணங்கள். 

மற்றுமொன்று அவ்வளவு அதிக பட்ச உயரத்தில் செல்லும் போது வளிமண்டலத்தில் குறையும் ஆக்சிஜனும் ஒரு காரணம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings