தனிமையில் டீச்சர்... நுழைந்த சமையல்காரர்... நடந்தது என்ன?

0

தனிமையில் வசித்து வருவது எவ்வளவு ஆபத்தை தந்து விடும் என்பதற்கு மும்பை சம்பவம் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

தனிமையில் டீச்சர்... நுழைந்த சமையல்காரர்... நடந்தது என்ன?
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் பெத்சேபா மோரிஸ். இவர் ஒரு டீச்சர். அதே பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 

அப்பார்ட்மென்ட் ஒன்றில், மகனுடன் டீச்சர் வசித்து வந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, தன்னுடைய பெட்ரூமில் டீச்சர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ராஜ்குமார், திடீரென கரண்ட்டை பாய்ச்சினார். 

நிறைய ஒயர்கள் மூலம், மின்சாரத்தை, டீச்சர் மீது நேரடியாகவே பாய்ச்சினார். மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் அலறியடித்து கொண்டு, எழுந்து கதறினார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து ரூமிலிருந்து அவரது மகன் ஓடி வந்தான். அப்போது, பெட்ரூமில் தன்னுடைய அம்மா மீது, சமையல்காரர் ராஜ்குமார், கரண்ட் ஷாக் தந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.

அந்த சிறுவனிடம் சமையல்காரர், உன் அம்மா என்கிட்ட எவ்ளோ கேவலமாக நடந்துக் கிட்டாங்க தெரியுமா? ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது. 

என்னிடம் கடுமையாக நடந்துக் கிட்டதால் தான் இப்படி ஒரு தண்டனையை தர்றேன் என்று சொல்லிக் கொண்டே அந்த ரூமை விட்டு வெளியே ஓடி விட்டார்.

இதைக் கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான் அந்த சிறுவன். பிறகு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் டீச்சரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். 

அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தரப்பட்டதை யடுத்து, உயிர் பிழைத்தார் டீச்சர். இந்த சம்பவம் குறித்து போலீசிலும் டீச்சர் பெத்சேபா மோரிஸ் புகார் அளித்தார். 

பன்றிக்கறி மூல நோயை குணப்படுத்தக் கூடியதா?

இந்த புகாரின் அடிப்படையில் 308வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். ஆனால், அதற்குள் சமையல்காரர் ராஜ்குமார் எஸ்கேப் ஆகிவிட்டார். 

அவரை வலைவீசி போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக, ஓனர் மீதே கரண்ட் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings