லியோக்கும் பிரச்னைகள்.. என்னாகப் போகுதோ வசூல் !

1

நடிகர் விஜய் நடித்து அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம், லியோ. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரக்க தொடங்கி இருக்கின்றன. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலை தளங்களில் வரவேற்பைப் பெற்றன.

லியோக்கும் பிரச்னைகள்.. என்னாகப் போகுதோ வசூல் !
விஜய் படங்களின் ஆகப்பெரும் புரமோஷனாக அவர் படங்களின் இசை வெளியீட்டு விழாவும், அதில் அவர் பேசும் குட்டிக் கதையும் அமையும். 

ஆகையால், அவரது ரசிகர்கள் அதனை மிகவும் ஆவலாக எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

நினைவாற்றலை அதிகரிக்க மாத்திரைகள் தேவையா?

இந்த விழா களைகட்டும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. 

இது தொடர்பாக செவன் ஸ்டுடியோ நிறுவனம் 'எக்ஸ்' சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் 

பாதுகாப்புக் கட்டுப் பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சொதப்பலில் முடிந்த நிலையில், இந்நிகழ்வுக்குப் பின் அரசியல் அழுத்தம் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால், தயாரிப்புக் குழுவோ, பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ள தாகவும், இந்த முடிவுகளுக்கு பின்னால் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட வேறு எந்த காரணங்களும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

விசாரிக்கையில் கிடைத்த தகவல்: கூடுதல் பாஸ், பாதுகாப்பு, ரஜினி ரசிகர்கள் பிரச்னை, சன் பிக்சர்ஸின் பிரச்னை, இவை யெல்லாம் சேர்த்து தான் படத்தின் தயாரிப்புக் குழுவை முடக்கிப் போட்டுள்ளது.

இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய் !

இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகையில், லியோவின் ஆடியோ லாஞ்ச் நடைபெறாதது, நிச்சயம் பி மற்றும் சி சென்டர்களில் பட வசூலைப் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

சுழற்றி யடிக்கும் பிரச்னைகள்: கேரளாவில் மோகன் லாலின் ரசிகர்களுடன் மல்லுக் கட்டிய விஜய் ரசிகர்களால், அம்மாநிலத்தின் லியோவுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. 

அதே போல், கர்நாடகாவில் காவிரி பிரச்னை உச்சம் அடைந்துள்ளதால், லியோ படம் அம்மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment
Privacy and cookie settings