செல்போன் வெடித்து இளம்பெண் பலி... அதிர்ச்சி சம்பவம் !

0

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் ஆறாம் விரலாய் செல்போன்கள் இருந்து வருகின்றன. இளசுகளை கேட்கவே வேண்டாம். ஒரு வேளை உணவில்லாமல் கூட இருந்து விடுகிறார்கள். 

செல்போன் வெடித்து இளம்பெண் பலி... அதிர்ச்சி சம்பவம் !
மொபைல் இல்லாத வாழ்க்கையை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஆனால் தகுந்த பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவு தான். 

செல்போனில் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதால் விபரீதங்கள் ஏற்படலாம் என எத்தனை முன்னெச்சரிக்கை பதிவுகள் வந்தாலும் கண்டு கொள்வதே இல்லை.

வெறும் வயிற்றில் இதை செய்தால் மரணம் ஏற்படலாம் ! 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வந்தவர் கோகிலா. இவருக்கு வயது 32 தான். 

இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்ட நிலையில் தனது 9 வயது மகன் பிரகதீசுடன் வாழ்ந்து வந்தார். இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார். 

என்றும் போல் இன்றும் கடைக்கு வந்தவர் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். அழைப்பு வரவே செல்போனில் சார்ஜ் இல்லை .இதனால் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். 

இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து கடை தீப்பற்றி எரிந்தது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.

உடனேயே தீ மளமளவென பரவியது. இதனால் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

செல்போன் கடை வைத்திருந்த இளம்பெண் தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings