காலில் இந்த அறிகுறி இருந்தால் புற்றுநோய் அபாயம்.. சத்து குறைபாடு காரணமா?

0

ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன் மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓர் உணவு ஆகும். 

காலில் இந்த அறிகுறி இருந்தால் புற்றுநோய் அபாயம்.. சத்து குறைபாடு காரணமா?
ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம் பெற்றிருக்கும். மனிதர்களுக்கு ஒவ்வொரு ஊட்டச் சத்துக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தான்.. 

நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இல்லாதபோது, அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் எனப்படும். 

6 மாத குழந்தை முதல் அனைத்து வயதினரும், பல்வேறு ஊட்டச் சத்துக்கள் மிகுந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது அவசியம். 

இந்த ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் இருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் ஊட்டச்சத்துக்களின் அளவு குறையும் போது தான் பல்வேறு பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். 

குறிப்பாக இரும்பு சத்துக் குறைபாட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உங்களது உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வது மட்டுமில்லாமல், பல கடுமையான நோய்களுக்கும் நீங்கள் ஆளாக நேரிடும். இது தவிர உங்களது கால்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

இதோ இன்றைக்கு இரும்புச்சத்து குறைபாட்டால் உங்களது கால்களுக்கு எந்தெந்த பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மருக்கள் : 

காலில் இந்த அறிகுறி இருந்தால் புற்றுநோய் அபாயம்.. சத்து குறைபாடு காரணமா?

மனித பாப்பிலோமோ வைரஸால் கால்களின் பாதங்களில் மருக்கள் அதிகளவில் ஏற்படும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது என்றும் இதை நீங்கள் அகற்ற வேண்டும் என்றால் அதிநவீன தொழில்முறை சிகிச்சை உங்களுக்கு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

முடக்குவாதம் ( RA): 

சில சமயங்களில் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது மூட்டு அழற்சி ஏற்படுகிறது. இது கால் பாதங்களில் மற்றும் அடி விரல்கள் சிறிய சிறிய புண்கள் ஏற்படக்கூடும்.

சில சமயங்களில் பெருவிரலின் அடிப்பகுதியில் லேசான வீக்கம் ஏற்படும். விரல்களிலும் இதே போன்று பாதிப்பு ஏற்படும் போது உங்களுக்கு மருத்துவர்களின் கவனிப்பு தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

புற தமனி நோய் (PAD) : 

காலில் இந்த அறிகுறி இருந்தால் புற்றுநோய் அபாயம்.. சத்து குறைபாடு காரணமா?

பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் முடி வளர்ச்சி குறைதல், ஊதா நிற கால் விரல்கள், மெல்லிய அல்லது பளபளப்பான தோல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இரும்பு சத்தின் குறைபாடு தான் காரணம் என்று அர்த்தம். 

எனவே நீங்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை உங்களது வாழ்க்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்து கின்றனர் மருத்துவர்கள்.

இரும்புச்சத்து குறைபாடு என்பது விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விதமான அறிகுறிகளை காண்பிக்கும். 

குறிப்பாக கடுமையான அரிப்பு, கால் சிவத்தல் மற்றும் அசௌகரியமான மனநிலை போன்றவை ஏற்படும். மேலும் கால்களில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படும். இதனால் கால்களில் ஆறாத புண்ணாக மாறக்கூடும்.

இரும்புச்சத்து குறைபாட்டால், உங்களுக்கு கால் நகங்கள் வித்தியாசமாக வடிவில் நமக்கு தெரியும். இது ஹீமோ க்ரோமாடோசிஸ் எனப்படும் இரும்புச்சத்து உற்பத்தியினாலும் இந்த பாதிப்புகள் ஏற்படும். 

எனவே எப்போதும் சரி விகிதமாக ஊட்டச் சத்துக்களை நாம் நிர்வகிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும். 

மேலும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கால்களில் புண்கள் எப்போதும் ஆறாத நிலையிலேயே இருக்கும். 

குறிப்பாக குதிக்கால்களில் ஏற்படும் புண்கள் ஆறாமல் நமக்கு மிகுந்த வலியையும் நமக்கு தரக்கூடும்.

இரும்புச்சத்து குறைபாட்டினல் கால்விரல்கள் மற்றும் தோல்களில் ஏற்படும் மாற்றங்களால் நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் இதய நோய்கள் நமக்கு ஏற்படக்கூடும்.

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

வளர்ந்த கால் விரல் நகங்கள்: 

காலில் இந்த அறிகுறி இருந்தால் புற்றுநோய் அபாயம்.. சத்து குறைபாடு காரணமா?

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது கால் விரல் நகங்களில் வலி மற்றும் தொற்று ஏற்படும். குறிப்பாக நகத்தின் வடிவத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வலியை நமக்கு ஏற்படுத்தும். 

சில நேரங்களில் இந்த விரல்களை வெட்டுவதற்கு கூட நாம் மிகுந்த சிரமத்தை சந்திப்போம். 

இது போன்ற பாதிப்புகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்படாடமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் உங்களது உணவு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். 

சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings