முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை !

0

முதலிரவு அறைக்குள் புது மண தம்பதியினர் நுழைந்துள்ளனர். அப்போது நடந்த அதிர்ச்சி சம்பவம், ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் அதிர வைத்து வருகிறது.

முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை !
முதலிரவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மணப்பெண், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் 28 வயதாகிறது. இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து பணியாற்றி வந்தார். 

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?

சரவணன் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ராஜராஜேஸ்வரி என்பது ஸ்வேதாவின் இயற்பெயர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தை சேர்ந்தவர் இந்த ஸ்வேதா. 

இவரும் சரவணனை உயிருக்கு உயிராக காதலித்தார். இறுதியில் இருவருமே தங்கள் வீடுகளில் காதல் விவகாரத்தை சொன்னார்கள். இரு வீட்டாரும், இவர்களின் திருமணத்துக்கு சம்மதம் தந்தார்கள். 

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவேரிப் பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணத்தை முடித்துக் கொண்டு, தம்பதி இருவரும் மறு வீட்டிற்காக திம்மாவரம் வந்திருக்கிறார்கள். இருவருக்கும், அன்றைய தினம் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. 

பிறகு, தம்பதி 2 பேருமே முதலிரவு அறைக்கு சென்றார்கள். நள்ளிரவு கடந்ததுமே, தூங்கி கொண்டிருந்த ஸ்வேதா எழுந்து பார்த்த போது, சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறி கூச்சலிட்டார். 

இந்த சத்தத்தை கேட்டு, வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். அப்போது சரவணன் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்தனர். 

இது குறித்து போலீஸாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, சரவணன் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணையையும் ஆரம்பித்தனர். சரவணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? 

உண்மையிலேயே தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, சரவணனின் மனைவி ராஜராஜேஸ்வரி, மாமனார் தாமோதரன், மாமியார் அலமேலு ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

முதலிரவுக்கு முன்பு, சரவணன் தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே தான் பேசினாராம். மறுநாள் தன்னுடைய புது மனைவியுடன் வெளியில் அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தாராம். 

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

அப்படி யிருக்கும் போது, நைட் நேரத்தில் என்ன நடந்தது? என்று தெரியவில்லையே என்று கதறி அழுகிறார்கள். இந்த உயிரிழப்பு தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதைவிட முக்கியமாக, முதலிரவு அறைக்குள் செல்லும் முன்பு சரவணன், தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே பேசியிருக்கிறார். எந்தவித பதட்டமும், வருத்தமும், முகத்தில் தெரியவில்லை என்கிறார்கள். 

இதனால், அடுத்த விசாரணை ஸ்வேதாவிடம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ஆனால், விடிகாலையில் எழுந்து பார்த்த போதே, சடலம் தூக்கில் தொங்கியதாக ஸ்வேதா கூறியுள்ளதால், மர்மம் இதில் நீடித்தபடியே உள்ளது. 

முதலிரவில், புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை இரு குடும்பத்தினரிடமும் ஏற்படுத்தி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !