வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

0

வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானோருக்கு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நோயாளிகளிடையே இந்த குறைபாட்டை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் பல சமயங்களில் மருத்துவர்களே தவறி விடுகின்றனர். 

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
அன்றாட உணவில் வைட்டமின் பி12-ஐ நமக்கு வழங்கும் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம்.  ஆனால், தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு மட்டுமே வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. 

இது மிகவும் குறைவானதே. ஆனால், இந்த அளவு குறைந்தாலும் நமக்கு பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும். 

உமிழ்நீர் இல்லாவிடில், வைட்டமின் பி12 உமிழ்நீரில் உள்ள ஆர் புரோட்டீனுடன் இணையாது. இதனால் பி12ஐ உறிஞ்சும் உடலின் திறன் தடைபடுகிறது. 

நமது வாய்ப்பகுதிக்கு வறட்சியை ஏற்படுத்தும் பல்வேறு மருந்துகள் காரணமாக, உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. 

அவற்றில் ஓபியாய்டுகள், உள்ளிழுக்கும் மருந்துகள், டிகோங்கஸ் டெண்டுகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ரத்த அழுத்த மருந்துகள் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Xanax போன்ற பென்சோடியா செபைன்கள் ஆகியவை அடங்கும். 

வைட்டமின் பி12 குறைபாட்டுக்கு வயிற்றில் குறைவான அளவு அமிலம் சுரப்பதும் காரணமாகிறது. அல்சருக்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகள் அல்சரை ஏற்படுத்தும் வயிற்று அமிலங்கள் சுரப்பை குறைக்கிறது. 

இந்த மாத்திரைகளுக்கும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயது முதிர்வும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை குறைக்கிறது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

வயிற்றில் உள்ள சிறப்பு பாரிட்டல் செல்கள் மூலம் இரைப்பை அமிலம் மற்றும்  இன்ட்ரின்சிக் ஃபேக்டர் உற்பத்தி B12ஐ உடல் உறிஞ்சுவதற்கு முக்கியமானது. 

ஆனால், வயிற்றுச் சுவரில் ஏற்படும் சிதைவும் இரண்டின் உற்பத்தியையும் பாதிக்கலாம். இரைப்பை அறுவை சிகிச்சை, நாள்பட்ட அழற்சி அல்லது தீங்கு விளைவிக்கும் ரத்த சோகை, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளால் வயிற்றுச்சுவர் சிதைவடைகிறது.

கணையம் முறையாக செயல்படாததும் விட்டமின் பி12 குறைபாட்டுக்கு பொதுவான காரணமாகும். டைப் 2 நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் மெட்ஃபார்மின் மாத்திரைகளும் பி12 குறைபாட்டை உண்டாக்குகிறது. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)