ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த பெங்காலி நடிகை !

0

சமீப காலமாக ஆன்லைன் முறையில் மோசடி செய்து பணம் பறிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பல வருடங்களாகவே பல்வேறு வகையான நிதி மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த பெங்காலி நடிகை !

ஆன்லைன் மூலம் பெரும்பாலான மோசடிகள் நடைபெற்றாலும் அது குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக பொதுமக்கள் தொடர்ந்து மோசடி செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன.  குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் புதுவித ஆப்ஸ்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை குறி வைத்து மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது. 

சில சமயங்களில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி, சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட மோசடிக் காரர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள். 

சமீபத்தில் ஸ்ரீலேகா மித்ரா என்ற வங்காள நடிகை இது போன்றதொரு ஆன்லைன் மோசடிக்கு உள்ளாகி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். 

மின்சார கட்டணம் செலுத்துவது தொடர்பாக இவரை தொடர்பு கொண்ட மோசடிக் காரர்கள் வெகு சாமர்த்தியமாக நடிகையை தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

48 வயதாகும் அந்த நடிகை, அவரின் பிறந்தநாளுக்கு முன்னர், யார் என்று தெரியாத ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்நபர் நடிகையிடம் ஒரு செயலியை குறிப்பிட்டு, அதனை மொபைலில் இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளார். 

அந்த சமயத்தில் காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்த அந்த நடிகை இதை பற்றி அதிகம் சந்தேகம் கொள்ளாமல் அந்த செயலியை தன்னுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துள்ளார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

அதன் பிறகு தான், அவர் ஏமாற்றப்பட்டது அவருக்கே தெரிய வந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் அவர் உணர்வதற்கு முன்பாகவே அவரது வங்கிக் கணத்திற்கான ஆக்சஸ் மோசடிக் காரர்களிடம் சென்று விட்டது. 

அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை நடிகையின் கணக்கிலிருந்து திருடி யுள்ளார்கள்.

நான் மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு முட்டாள் தனமான தவறை செய்து விட்டேன். 

அனைவரும் மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே இது போன்ற வலைகளில் விழாமல் என்னை போல் பணத்தை இழக்காமல் மிகவும் பாதுகாப்பாக இருக்க முடியும். 

ஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கான பணத்தை இழந்த பெங்காலி நடிகை !

நான் எவ்வளவு பணத்தை இழந்தேன் என்பதை நான் இங்கு கூறப்போவதில்லை, ஆனால் அந்த தொகையானது ஒரு லட்சத்திற்கும் அதிகமானது என்பது மட்டும் உண்மை. 

இதைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டுமல்லாமல் சைபர் செல்லையும் தொடர்பு கொண்டு சம்பவத்தை பற்றி கூறியுள்ளேன் என்று மித்ரா குறிப்பிட்டுள்ளார்.

நட்சத்திர அந்தஸ்த்தில் இருப்பவர்கள் மோசடிக் காரர்களால் ஏமாற்றப்படுவது இதுவே முதல் முறை அல்ல. 

ஏற்கனவே கடந்த வருடம் பிரபலமான நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அன்னு கபூர் இது போன்ற வலையில் விழுந்து 4.36 லட்சம் அளவிலான பணத்தை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings