வாகன சோதனையில் சிக்கிய 9 டூ வீலர்... வாலிபர் கைது !

0

விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனா். அவரிடமிருந்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனையில் சிக்கிய 9 டூ வீலர்... வாலிபர் கைது !
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ரயில்வே கேட் அருகில் வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 

உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

(getCard) #type=(post) #title=(You might Like)

விசாரணையில் அவர் விழுப்புரம் அருகே வளவனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தீபக்ராஜ் (வயது 46) என்பதும், இவர் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. 

ரவுடியான இவர் மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. இதையடுத்து தீபக்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !