மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

0

மரு - முகம், கை, கால், கழுத்து, அக்குள் என்று உடலின் பல பகுதிகளிலும் பரு போன்ற வடிவில் உருவாகுத் தொடங்கி, பின் பெரிதாகிக் கொண்டே போகும் முக்கிய தொந்தரவு. 

மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?
மருக்கள், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அவற்றை போக்க என்னதான் செய்வது என்ற குழப்பம் மரு உள்ளவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இதற்காக யூ-ட்யூப் வீடியோக்களை பார்த்து வீட்டு மருத்துவம் செய்யும் பலரும் இங்குண்டு.

மருக்கள் எவ்வாறு உருவாகின்றன?

உடலில் உள்ள வெப்பத்தின் மிகுதியால் உடலில் உண்டாகும் கழிவுகள், அழுக்குகள், LDL எனப்படும் மோசமான கெட்ட கொழுப்புகள் மிகுதியாகும் போது, அவை மருவாகிறது. 

நாம் பயன்படுத்தும் முகப்பவுடர், கிரீம்கள், உடலின் மேற்புரத்தில் உள்ள துவாரங்களை அடைத்து வியர்வை மற்றும் வெப்பம் வெளியேற முடியாமல் செய்யும். அப்படியான சூழலிலும் மருகுகள் உருவான்றன.

(getCard) #type=(post) #title=(You might Like)

12 வகை மருகுகள்

மருக்களை தமிழ் சித்தர்கள் 12 வகையாக பிரித்துள்ளனர். பொதுவாக மருகுகள் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருகின்றது. 

இவற்றின் நாள்பட்ட வளர்ச்சி யென்பது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆகவே உரிய சிகிச்சையை பெற்று மருக்களை நீக்கிக் கொள்ள வேண்டும்.

பல்வேறு சிகிச்சை முறை

மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

ஆபரேஷன் செய்து மருகை நீக்குவது, லேசர் சிகிச்சையை வைத்து மருக்களை நீக்குவது என்று பல சிகிச்சை முறைகள் தற்போது வந்து விட்டன. இருப்பினும், இந்த சிகிச்கை முறைகள் மருக்களின் வளர்ச்சியை வேரோடு குணமாக்குவ தில்லை. 

அதாவது, வெளியில் தெரியும் மருக்களை அழிக்குமே தவிர, அந்த இடத்தில் அவை மீண்டும் உருவாகாமல் இருக்க வழி செய்யாது. ஆகவே மருக்களை நீக்கிய பின்னும் கவனம் தேவை.

கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, பொதிகை மலைகளில் கிடைக்கும் சித்த மூலிகைகள் மூலம் மருக்களை குணப்படுத்தலாம். 

மேலும், அந்த மூலிகைகளை கொண்டு மருந்து தயாரிக்கப்பட்டு, அவை மருகின் வேர் வரை சென்று அதனை முழுமையாக அகற்றவும் உதவும். 

இவை அனைத்தையும் உரிய சித்த மருத்துவரிடம் கேட்டு தான் செய்ய வேண்டும். உரிய சான்று பெறாத நபரிடம் செய்தால், சிக்கல்.

உங்க தெருவுல பீஸ் போயிருச்சா? இதை பண்ணுங்க, லைன் மேன் வீட்டு வாசலில் !

மருக்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் வெப்பநிலை அதிகமாவதே மருக்களுக்கு காரணமாக அமைகின்றது. ஆகவே உடல் வெப்ப நிலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிகளவு இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, உடலின் வெப்பநிலையை அதிகமாக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது, எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, துரித உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

மருக்களை நீக்க இதெல்லாம் செய்யாதீங்க...

மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

மருகை சிலர் முடி, நூல் போன்றவை கட்டி இழுப்பதுண்டு. இதன் மூலம் மரு உதிர்ந்து விடும்தான். ஆனால் அதேயிடத்தில் மரு மீண்டும் வளரும். 

மேலும் மருவில் இருந்து வரக்கூடிய நீர், ரத்த திசுக்கள் போன்றவை அருகிலுள்ள இடத்தில் மரு பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே அதை செய்யக் கூடாது.

மொகரம் என்றால் என்ன? வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் !

இதேபோல பேக்கிங் சோடா, பூண்டு, இஞ்சி போன்றவற்றின் சாறுகளை மருகின் மீது வைப்பதன் மூலம் அது கீழே விழுந்தாலும் அந்த இடத்தில் எரிச்சல், வடு, ஆராத புண் ஏற்படும். எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings