பணத்திற்காக இதை மட்டும் செய்ய மாட்டேன் சச்சின் !

0

தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியாது என புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என சச்சின் கூறியுள்ளது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

பணத்திற்காக இதை மட்டும் செய்ய மாட்டேன் சச்சின் !
சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை பெரும்பாலான பிரபலங்கள் விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் 

அதிலும் ஒரு சில நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகில் தஜ்ஜால் வரும் நாள் இறுதி என்பது உறுதியானது !

தங்களுடைய தொழிலுக்கு நிகரான வருமானம் கிடைக்குது என்று பல நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். 

அது மட்டும் இல்லாமல் விளம்பர படம் எடுக்கும் கம்பெனிகள் அந்த நடிகர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளும் வழங்கி வருகிறார்கள். 

அதனால் நடிகர் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதனை பயன்படுத்தி விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள் காசு பார்த்து வருகிறார்கள்.

இதில் என்ன ஒரு வேதனை தரும் செய்தி என்றால் பணத்திற்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களிலும் சிலர் நடிக்கிறார்கள், அந்த வகையில் ஆன்லைன் ரம்மி விளம்பரம் மிகப்பெரிய சர்ச்சையானது. 

இதில் விதிவிலக்கு என்னவென்றால் சில பிரபலங்கள் விரும்பத் தகாத விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை சாய் பல்லவி எவ்வளவு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் அழகு சாதன விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார். 

அதாவது ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் அறவே நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அதேபோல் நடிகர் சிம்பு எவ்வளவு பணம் கொடுத்தாலும் மது தயாரிக்கும் விளம்பரங்களில் நடிப்பதில்லை என உறுதியாக இருக்கிறார். 

இன்னும் சில பிரபலங்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் விளம்பரங்களில் நடிப்பதில் தவிர்த்து வருகிறார்கள் அதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் அவர்கள் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது நான் இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஏராளமான விளம்பர வாய்ப்புகள் வந்தது அதில் பெரும்பாலும் நிறுவனங்கள் புகையிலை விளம்பர வாய்ப்புகள் நடிப்பதற்கு வந்தது. 

அப்பொழுது என்னுடைய தந்தை நீ மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் புகையிலை பொருட்களை ஒரு போதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என கூறி இருந்தார்.

புகையிலை நிறுவனங்கள் எனக்கு ஏராளமான சலுகைகள் வழங்குவதாகவும் அதனால் அவற்றில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். 

எண்ணெய் குளியல் சரியா? எப்படி குளிக்கலாம்?

ஆனால் என் தந்தையிடம் செய்து கொடுத்த சத்தியத்தை காக்க வேண்டும் என்பதற்காகவே அதனை மீறக்கூடாது என்பதற்காகவே எனக்கு வந்த புகையிலை நிறுவனங்களை புறக்கணித்து விட்டேன் என கூறியிருந்தார். 

பணத்திற்காக எந்த விளம்பரத்தில் வேண்டு மென்றாலும் நடிக்கலாம் என்று இருக்கும் பிரபலங்கள் மத்தியில் சச்சின் இவ்வாறு கூறியது அவர்களுக்கு சரியான சவுக்கடி பதிலாக அமைந்துள்ளது என நெட்டிசங்கள் கூறி வருகிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings