நம் உடலில் வியர்வை ஏன் உருவாகிறது?

0

வியர்வையானது ஆன்டி பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து From microbes நல்ல பாதுகாப்பு அளிக்கிறது. வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். 

நம் உடலில் வியர்வை ஏன் உருவாகிறது?
மனிதர்களாகிய நாம், வெப்ப ரத்தப் பிராணிகள் Warm blooded animals என்று படித்திருப்பீர்கள். 

அதாவது, வெளியில் வெப்பநிலை எப்படி இருந்தாலும் நம் உடலில் வெப்பநிலை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடிய தகவமைப்பை இயற்கை வழங்கி யிருக்கிறது. 

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

நம் உடலின் வெப்பநிலை 98.6 ஃபாரன்ஹீட். வெளியில் வெப்பநிலை அதிகரிக்கும் போது நம் உடல் வெப்பநிலையும்  ஆரம்பிக்கும்.

உடனே, நம் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்து வியர்வையை உற்பத்தி செய்து, தோலுக்கு அனுப்பும். நீரை ஆவியாக மாற்றுவதற்கு வெப்பம் அவசியம் தேவை அல்லவா? 

தோல், நம் உடலிலிருந்து வெப்பத்தை எடுத்து, நீரை ஆவியாக்கும். அப்போது உடல் வெப்பநிலை இயல்பை நோக்கிக் குறைய ஆரம்பித்து விடும். 

அதே போல நாம் ஓடும் போது, உடற்பயிற்சியின் போது, கடினமான வேலைகளைச் செய்யும் போது உடலில் உள்ள உறுப்புகள் வேகமாக இயங்க ஆரம்பிக்கும். அப்போது அவற்றுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படும். 

நாம் சாப்பிடும் உணவிலிருக்கும் சத்துகளை எரித்து, ஆற்றலாக மாற்றும். அப்போது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதைக் குறைப்பதற்காக வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்யும். 

வியர்வை ஆவியாகி, உடல் வெப்பநிலை இயல்புக்குத் திரும்பும். வியர்வை மூலம் நம் உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறுகின்றன. 

இந்தியர்களுக்காக அடித்துக் கொண்ட நிறுவனம்.. கிடுக்குபிடி போட்ட சுந்தர் பிச்சை !

வெயில் காலத்தில் சிறுநீரகத்துடன் வியர்வையும் சேர்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது, ஆனால் மழை காலத்தில் வியர்வை சுரக்காததால், சிறுநீரகம் மூலம் கழிவுகள் வெளியேறுகின்றன. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings