மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்... அந்தோ பரிதாபம் !

0

நடிகர் மொட்டை ராஜேந்திரன் பல படங்களில் எடுபுடி கதாபாத்திரத்திலும், அடியாள் உள்ளிட்ட சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து பிறகு நான் கடவுள் படத்தின் மூலம் பிரபலமானவர்.

மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்... அந்தோ பரிதாபம் !
அடுத்தடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, டார்லிங் உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 

தயிருடன் சில உணவுகளை உண்ணக்கூடாது ஏன்?

2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தின் மூலமாக புகழ் பெற்றார்

பார்க்கும் போதெல்லாம் சிரித்த முகமாக இருக்கும் இவரின் நிஜ வாழ்க்கையில் பல துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிகர் மொட்டை ராஜேந்திரனின் தாத்தா, தந்தை இருவருமே சினிமா ஸ்டண்ட் நடிகர்களாக இருந்துள்ளனர். ஆனால் இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

ஆனால் தான் கருப்பாக இருப்பதாலும், தன்னுடைய குரல் சற்று கரகரப்பாக வித்தியாசமாக இருப்பதாலும் சிறு வயதில் இருந்தே கேலி,கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். 

எனினும் சில முறை ஹீரோவாக முயற்சித்துள்ளார். ஆனால் அங்கேயும், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இவரை கேலி செய்து, உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா என்றெல்லாம் கேட்டு காயப்படுத்தி விட்டனர். 

இதனையடுத்து இவரும் ஸ்டண்ட் கலைஞராக சினிமாவில் வலம் வந்துள்ளார். பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு 58 வயதில் தான் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தார் ராஜேந்திரன். 

உணவு வீணாவதை எவ்வாறெல்லாம் தவிர்க்கலாம்?

அதன், பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன், வருத்தப்பாத வாலிபர் சங்கம் என பல காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். 

சிறு வயதில் அடர்த்தியான முடியுடன் இருந்த இவர் தற்றோது தலைமுடி, மீசை, தாடி, புருவம் எதுவுமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரனான கதையை பற்றி பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

ஒரு மலையாள பட இயக்குநர் சண்டை காட்சிக்காக இவரை ஒரு ஆற்றில் குதிக்க சொல்லி யிருக்கிறார். அந்த ஆற்றில் ஏதோ கெமிக்கல் கலக்கப் பட்டதால், விஷமாக மாறி விட்டது என்பதை அவரிடம் மறைத்து விட்டனர். 

மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்... அந்தோ பரிதாபம் !

சண்டைக் காட்சிக்காக அந்த ஆற்றில் இரண்டு முறை குதித்துள்ளார். இரண்டாவது முறை குதித்து மேலே எழுந்த போது, பாதி முடி, மீசையெல்லாம் கையோடு வந்து விட்டதாம்.

இதை பார்த்து பயத்திலும், விரக்தியிலும் அங்கேயே கதறி கதறி மொட்டை ராஜேந்திரன் அழுதார் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். 

ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !

ஏற்கனவே உறுவக்கேலிக்கு ஆளானதால், வெளி உலகை பார்க்கவே பயந்து வீட்டிற்குள்ளேயே 6 மாதம் முடங்கி விட்டாராம். 

அதன் பிறகு தற்போது அதுவே அவரின் தனித்துவமான அடையாளமாக மாறி, 58 வயதிற்கு மேல் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings