துபாயிலிருந்து தக்காளியை கடத்திய மகள். மகிழ்ச்சியில் தாயார் !

0

தக்காளி விலை இந்தியாவில் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதை மையப் படுத்தி பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்து வருகின்றன.

துபாயிலிருந்து தக்காளியை கடத்திய மகள். மகிழ்ச்சியில் தாயார் !
தக்காளியை கொள்ளையர்கள் குறி வைத்து திருடுவது, தக்காளிக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு, கல்யாண நிகழ்ச்சிகளில் தக்காளி கூடைகள் பரிசாக அளிப்பது என்று இந்த சம்பவங்கள் நீள்கின்றன. 

அந்த வகையில் துபாயிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய மகள் தாயாருக்கு தக்காளி கொண்டு வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

துபாயிலிருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வர விரும்பிய மகளிடம் இந்தியாவை சேர்ந்த அவரது தாயார் தக்காளியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். 

சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?

இதை ஏற்று மகள் 10 கிலோ தக்காளியை பார்சல் செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் யூசர் ஒருவர் பதிவிட அந்த பதிவு வைரலாகி யுள்ளது. 

Revs என்ற அந்த யூசர் தனது ட்விட்டர் பதிவில், 'என் சகோதரி விடுமுறைக்காக அவரது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இந்தியா வந்தார். அப்போது அவர் என் அம்மாவிடம் துபாயில் இருந்து விடுமுறைக்கு வருகிறேன். 

துபாயிலிருந்து தக்காளியை கடத்திய மகள். மகிழ்ச்சியில் தாயார் !

உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்க, அதற்க என் தாயார் 10 கிலோ தக்காளி வாங்கி வா என்று கூறியுள்ளார். அதனை சூட்கேஸில் பார்சல் செய்து என் சகோதரியும் கொண்டு வந்துள்ளார்' என்று பதிவிட்டுள்ளார்.

தக்காளி விலை இந்தியாவில் சில பகுதிகளில் கிலோ ரூ. 250க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினை – கேரட் ரைஸ் செய்வது எப்படி?

புனேவில் தக்காளியை மட்டுமே பயிரிட்ட விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் மட்டும் ரூ. 3 கோடி வருமானம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)