ஆபாச வீடியோ காட்டி அடிப்பார்.. சம்யுக்தா பேட்டி !

0

ஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா. அவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணு காந்தை திருமணம் செய்து கொண்டார். 

ஆபாச வீடியோ காட்டி அடிப்பார்.. சம்யுக்தா பேட்டி !

இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் கூட நிலைக்கவில்லை. கடந்த சில வாரங்கள் முன்பு இருவரும் பிரிந்தனர். 

சர்க்க‍ரை வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்பு வராமல் இருக்க  !

இருவரும் மாறி மாறி குறை கூறி யூ-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் பேட்டி அளித்த சம்யுக்தா சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், என்னையும், என் பெற்றோரையும் விஷ்ணுகாந்த் எப்போதுமே மரியாதையாக நடத்தியது இல்லை. கால் மேல் கால் போட்டு கொண்டு அவர் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என மிரட்டுவார்.

அவர் ஏன் என்னை கல்யாணம் செய்தது ஒரே விஷயத்திற்காக தான். அவர் என்னை செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார். ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என அவருக்கு தெரியவில்லை.

24 மணி நேரமும் அதே நினைப்பு தான் அவருக்கு இருக்கும். நான் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என நினைச்சது கூட இல்லை. 

நான் அவரின் விருப்பத்தின் பேரில் உறவில் ஒத்துழைக்க வில்லை என்றால் என்னை வேறு விதமாக ட்ரீட் பண்ணுவார். 

இரண்டு பேரும் புரிந்து, இணைந்து உறவில் இருந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும். அந்த விஷயத்தில் நான், விஷ்ணு காந்துக்கு மனிதராக தெரிய வில்லை. மிஷினாகவே தெரிந்திருக்கிறேன்.

ஆபாச வீடியோவை பார்த்து இந்த மாதிரி செய்ய வேண்டும் என சொல்லுவார். அதற்கு நான் ஒத்துழைக்க வில்லை என்றால் அதற்கு தகுதி யில்லாதவர் என சொல்லுவார்.

பெண் என்றால் மனைவி மட்டும் தானா?

என்னால் முடியாது என சொன்னால், இந்த ரூம்ல கேமரா வைத்து நாம் இருவரும் இருக்கும் வீடியோவை போட்டு பார்க்கலாம் என சொல்லுவார். இதை எல்லாம் என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை. 

பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ஏற்பட்டு விட்டது. அதை கூட விஷ்ணுகாந்த் கொஞ்சம் கூட பொருட்படுத்த வில்லை. வலி தாங்க முடியாமல் கத்தினால் அதற்கு வாய்யை மூட சொல்லி அடிப்பார் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)