ஆடி காரில் டீ விற்கும் மும்பையைச் சேர்ந்த இளைஞர்கள் !

0

இளைஞர்கள் இரண்டு பேர் ஆடி காரில் டீ விற்பனை செய்வது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆடி காரில் டீ விற்கும் மும்பையைச் சேர்ந்த இளைஞர்கள் !

மும்பையைச் சேர்ந்த மன்னுசர்மா, அதித்காஷ்யப் ஆகிய இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எந்த வியாபாரமும் குறைவானது கிடையாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் வீடியோ ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக இப்படி ஆடி காரில் டீ விற்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் ஆடி காரில் டீ விற்பனை செய்துவரும் இளைஞர்களுக்கு பாராட்டும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)