ஒரே ஒரு மரம்... நாவல் கொடுத்த நல்ல வருமானம் !

0

நண்பர் கொடுத்த ஜம்பு வகை நாவல் மரக்கன்று ஒன்றை எனது தோட்டத்தில் விளையாட்டாக நட்டு, தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்த்து வந்தேன்.

ஒரே ஒரு மரம்... நாவல் கொடுத்த நல்ல வருமானம் !
அதில், கடந்த போகத்துல மட்டும் 70 கிலோ நாவல் பழம் கிடைத்தது. ரூ. 14,000 க்கு விற்பனை பண்ணினேன். அதன் சுவை பிடித்துப் போய், தோட்டத்திலேயே வந்து பலரும் நாவல் பழத்தை வாங்கிட்டுப் போனாங்க. 

இந்த வருடமும் அதே அளவுவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும் என்று நினைக்கிறேன்  என்று உற்சாகமாக பேசுகிறார், மனோகரன்.

வெட்டுக் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்ன செய்ய கூடாது?

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வேட்டையார் பாளையத்தைச் சேர்ந்த மனோகரன், ஓர் இயற்கை விவசாயி. அதோடு, தமிழக காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

லத்தி பிடித்த கையால் தற்போது மண்வெட்டி பிடித்து தனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

அவருடைய தோட்டத்தில் உள்ள ஒரு நாவல் மரம் தான் கடந்த போகத்தில் மட்டும் ரூ. 14,000 வருமானம் பெற்று கொடுத்ததாக, அந்த மரத்தை பற்றி சிலாகிக்கிறார் மனோகரன். 

அவருக்கு கைகொடுக்கும் அந்த மரம் குறித்து, மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள மனோகரிடமே பேசினோம்.

எனக்கு இந்தப் பகுதியில் 15 ஏக்கர் நிலமிருக்கிறது. பூர்வீக தொழில் விவசாயம் என்றாலும், நான் படித்து போலீஸ் வேலைக்குப் போனேன். இருந்தாலும், 1990 ல் இருந்து இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். 

பலவகை மரப்பயிர்களை எனது தோட்டத்தில் வளர்த்திருக்கிறேன். 

அப்படி தான், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, குழந்தைசாமி கவுண்டர்ங்கிற நண்பர் ஒருத்தர், எனக்கு இந்த நாவல் மரக்கன்றை அன்பளிப்பாக வழங்கினார். 

உடனே, அதை மகிழ்ச்சியாக எடுத்து வந்து, என் தோட்டத்தின் மையத்தில் அதை நட்டேன். வெறும் தண்ணீர் மட்டுமே விட்டு வளர்த்தேன். தண்ணீரையும் இந்த மரக்கன்றுக்கு என்று தனியாக விடவில்லை. 

பக்கத்தில் உள்ள கொய்யாக் கன்றுகளுக்கு போகும் தண்ணீர், இந்த நாவல் மரக்கன்றுக்கும் சென்றது. அதனால், இந்த மரக்கன்று நன்றாக வளர்ந்தது. கன்று வைத்ததில் இருந்து உரம் எதுவும் நான் வைக்கவில்லை. 

நாவல் மரக்கன்று வளர வளர அதில் இருந்து இலைகள் விழுந்து, அவையே இந்த மரத்துக்கு உரமாக மாறியது. இந்நிலையில், மூன்று வருஷத்துக்கு முன்னாடி இந்த மரம் முதல் காய்ப்புக்கு வந்தது. 

அந்த போகத்தில் வெறும் 5 கிலோ பழம்தான் கிடைத்தது. அதை வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து, அவர்களை சாப்பிட வைத்தேன்.

தொடர்ந்து, 2 வருடங்களுக்கு முன்பு, 20 கிலோ வந்தது. அதை தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்தேன். இந்நிலையில் தான், கடந்த வருஷம் இந்த மரத்தில் 100 கிலோ வரை பழம் கிடைத்தது. 

பெண்களின் மார்பகம் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டிய விஷயம் !

அவற்றில், 20 கிலோ வரை தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு கொடுத்தேன். எங்க வீட்டில் உள்ளவர்களும் உண்டு மகிழ்ந்தோம். இன்னும் பத்து கிலோ பழத்தை குருவிகள் உள்ளிட்டப் பறவைகள் சாப்பிட அனுமதித்தேன். 

மீதமுள்ள 70 கிலோ பழத்தை கிலோ ரூ. 200 என்று விற்பனை செய்தேன். ரூ. 14,000 கிடைத்தது. நானாக தேடிப்போய் பழத்தை விற்பனை செய்யவில்லை. 

இந்த வழியாக வருபவர்கள், என்னோட இயற்கை தோட்டம் பற்றி கேள்விப்பட்டு, உள்ளே வந்து இரண்டொரு பழத்தை சாப்பிட்டுப் பார்ப்பாங்க. 

அந்த டேஸ்டுல சொக்கிப் போய், ஆளுக்கு இரண்டு கிலோ, மூன்று கிலோ என்று வாங்கிப் போனார்கள். 

இந்த வழியாக வந்த பேங்க் மேலாளர் ஒருவர், என்னோட இயற்கை தோட்டம் ப்ளெக்ஸ் போர்டை பார்த்துட்டு, உள்ளே வந்தார். 

நாவல் பழத்தை சாப்பிட்டுப் பார்த்ததும், சுவை அவருக்கு பிடித்துப் போக, சக பேங்க் ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக, 4 கிலோ பழத்தை வாங்கிட்டுப் போனார்.

அதே போல், இந்த வழியாக சென்ற தனியார் கம்பெனி உயரதிகாரி ஒருவர், அதேபோல் தோட்டத்துக்கு வந்து, பழத்தைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு, ஆறு கிலோ வரை பழம் வாங்கிட்டுப் போனார். 

இப்படியே, தோட்டத்தில் வைத்தே 60 கிலோ வரையிலான பழங்கள் விற்பனையாகி விட்டது. மீதியிருந்த 10 கிலோ பழத்தை கரூருக்கு பறித்துக் கொண்டு போய் உடனே விற்பனை பண்ணி விட்டேன். 

இந்த பழத்தை சாப்பிடுபவர்கள், 'சாப்பிடச் சாப்பிட திகட்டவே இல்லை. ரொம்ப நல்லா இருக்கு இந்த மரத்துப் பழம்' என்று இந்த பழத்தை மெச்சிவிட்டு, சாப்பிட்டாங்க.

கையில் அம்பது பழம் இருந்தாலும், ஒரே ஆள் அப்படியே சாப்பிடலாம். இந்த ஜம்பு வகை நாவல் பழம் சுவை மிகுதியாக இருப்பது ஒருபக்கம் என்றால், இதில் நிறைய மருத்துவக் குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். 

ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் பரவலாக பயிரிடப்படும் இந்த ஜம்பு வகை நாவல் மரங்கள், தற்போது தமிழகத்திலும் அதிகரித்துள்ளன. 

சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் சாப்பிடுவது என்று சொல்லப் படுவதால், தற்போது நாவல் பழத்தின் விலை ஆப்பிளை விட அதிகமாகி யுள்ளது.

குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 

இந்த மரம் ஒரே போகத்தில் ரூ.14,000 வருமானம் கொடுத்த சந்தோஷத்தில், பக்கத்தில் உள்ள இடத்தில் இன்னும் கூடுதலாக நாவல் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். 

தற்போது இந்த நாவல் மரம் பூபூத்திருப்பதால், இந்த போகத்திலும் கடந்த வருடம் வருடம் கிடைத்த அளவிற்கு குறையாமல் நாவல் பழம் அறுவடை செய்ய முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறேன். 

இந்த வருடமும் நாவல் பழத்தின் விலை கிலோ ரூ. 300 க்கு மேல் உள்ளது. இது போல், பத்து மரங்கள் இருந்தால், செலவே இல்லாமல் நன்றாக லாபம் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். 

நாவல் மர வெள்ளாமை பரப்பை அதிகப்படுத்தும் முடிவில் உள்ளேன்  என்றார் உற்சாகத்துடன். Vikatan

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings