சுற்றுலாப் பயணிகளுக்கு பூடான் அரசின் செம ஆபர் !

0

பூடான் அதன் அழகிய நிலப்பரப்புகள், புத்த மடாலயங்கள் மற்றும் பல மலை வாஸ்தலங்களுக்கு புகழ் பெற்றது. மேலும் இந்திய மக்களால் விசா இல்லாமல் செல்லக்கூடிய அருகில் உள்ள நாடுகளில் பூட்டனும் ஒன்று.

சுற்றுலாப் பயணிகளுக்கு பூடான் அரசின் செம ஆபர் !
ஆண்டு தோறும் பல ஆயிரம் மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய எல்லை யிலிருந்து பூடான் தலைநகரான திம்புவுக்கு ஒரு கோவேறு கழுதை மூலம் பயணம் செய்தால் ஆறு நாட்கள் ஆகும். 

தற்போது இந்த பயணத்தை, எல்லை நகரமான ஃபண்ட்ஷோ லிங்கிலிருந்து வளைந்த மலைப் பாதையில் காரில் சென்றால் சில மணி நேரங்களில் அடைய முடியும். 

அரசாங்க அமைப்பும் அடியோடு மாறியது. இப்போது பூட்டான் நாடு 2024 இறுதி வரை நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கையை  ஊக்குவிக்க சில சலுகைகளை அறிவித்து வருகிறது. 

அப்படி அறிவிக்கப் பட்டுள்ள ஒரு சலுகையை பற்றி தான் இப்பொது நாங்கள் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

முன்னதாக பூட்டான் அதன் நிலையான மேம்பாட்டு கொள்கைகளுக்காக சுற்றுலா காரணத்திற்காக வரும் மக்களிடம்  ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும் அறிவிப்பை கொண்டு வந்தது. 

அதுவும் கோவிட் காலத்திற்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தனது எல்லைகளை மீண்டும் திறந்த போது ஒரு நாளைக்கு $65 முதல் $200 வரை கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது.

ஆனால் இப்போது, ​​சுற்றுலாத் துறை ஒரு ஊக்கத் தொகையுடன் கூடிய சுற்றுலா பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது, 

அதில் பயணிகள் குறைந்தது ஐந்து இரவுகள் அங்கு தங்கி யிருந்தால் பூட்டானின் தினசரி சுற்றுலாக் கட்டணங்களில் சிலவற்றைச் செலுத்துவதைத் தவிர்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், நீங்கள் எவ்வளவு நேரம் தங்குகிறீர்களோ, அவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படும் என்ற பம்பர் ஆபாரை அறிவித்துள்ளது. 

பூட்டானின் சுற்றுலாத் துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பின் படி, முதல் நான்கு நாட்களுக்கு SDFக்கு பணம் செலுத்தும் பயணிகள், கட்டணம் செலுத்தாமல் கூடுதலாக நான்கு நாட்கள் தங்கி மகிழலாமாம்.

அதேபோல், முதல் ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்தும் பயணிகள், இரண்டாவது வாரத்தில் கட்டணம் செலுத்தாமல் கூடுதலாக ஏழு நாட்கள் தங்கி யிருப்பார்கள். 

சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?

அதே சமயம் 12 நாட்களுக்கு கட்டணம் செலுத்து பவர்களுக்கு அதன்பின் 18 நாட்களுக்கு அதைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு பூடான் அரசின் செம ஆபர் !

இந்த மாற்றங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று  அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இது விடுமுறைக்கு வருபவர்களை அதிக நேரம் தங்குவதற்கு ஊக்குவிக்கும் என்று பூட்டான் சுற்றுலா துறை நம்புகிறது. இதன் மூலம் அதிக மக்களை தங்கள் பால் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.

யாராவது வந்தால் ஸ்டூல்ல ஏறி ஓட்ட வழியா பார்ப்பேன் ! 

பூட்டானின் குடிவரவுத் துறையானது, பல்வேறு ஊக்கத் திட்டங்களின் கீழ் பயணிகள் சாத்தியமான சேமிப்பைக் கணக்கிடக் கூடிய இணைய தளத்தைக் கொண்டு வர முன்வந்துள்ளது. 

அதில் உங்கள் பயண திட்டத்திற்கு ஏற்ற சலுகைகளை முன்னரே தெரிந்து கொண்டு பூடானுக்கு பயணிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings