முதுகு வலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் தரும் ஆசனம் !

0

செய்முறை : யோகா விரிப்பில் வயிற்று பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும். பாதங்களையும் முன் கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும். 

உடல் எடை முழுவதும் பாதங்களிலும் கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும். தோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

நன்மைகள் : மணிக்கட்டுகள் தோள்பட்டை எலும்புகள் வலுவடைகின்றன. இடுப்பின் கீழ்பகுதி தசைகள் தளர்ந்து வலுவடைகின்றன. மார்பு மற்றும் தோள் தசைகள் விரிவடைகின்றன. 

அடிவயிற்று தசைகள் மற்றும் உறுப்புள் சமநிலைப் படுகிறது. தொப்பை குறைந்து கூன் நீங்கி உடல் தோற்றம் சீராகிறது. இதயம் வலுவடைகிறது.
இடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சியாடிக்கா என்னும் கெண்டைக்கால் வலியைப் போக்குகிறது. 

மார்பு விரிவடைவதால் நுரையீரல் அடைப்பு நீங்கி ஆஸ்துமா நோயிலிருந்து குணம் பெறலாம்.
நீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை !
தலையை மேல்நோக்கி பார்க்கும் போது மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி தலைசுற்றல் நீங்குகிறது. தைராய்டு சுரப்பு சமநிலை அடைந்து தைராய்டு கட்டி கரைகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings