இந்த கிராமத்தில் தங்கினால் கார், பங்களா கிடைக்கும் !

0

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கினால் பங்களாவும், காரும் இலவசமாக கிடைக்கும். அந்த கிராமம் எங்குள்ளது?

இந்த கிராமத்தில் தங்கினால் பங்களா, கார் இலவசமாக கிடைக்கும் !
உலகின் பல இடங்கள் விசித்திரமான விதிகள், ஒழுங்கு முறைகளை கொண்டுள்ளன. சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் உங்களுக்கு பங்களா, கார் இலவசமாக வழங்கப் படுகிறதாம். 

இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இத்தனை சிறப்பு வாய்ந்த கிராமத்தை 'சூப்பர் வில்லேஜ்' என அழைக்கிறார்கள். பொருத்தமான பெயர் தான். இந்த கிராமம் சீனாவின் ஹுவாக்ஸி (Huaxi) ஆகும். 

இந்தக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், நகர மக்களை போன்றது. நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் கோடீஸ்வரர்கள். 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் ஹுவாக்ஸி. இந்த கிராமம் 1960ஆம் ஆண்டில் து ரென்வான் என்ற தலைவரால் உருவாக்கப் பட்டது. இந்த கிராமத்தில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.  

இந்த கிராமத்தில் ஹெலிபேட் மைதானம், தீம் பார்க் ஆகியவை உள்ளது. மக்கள் பொழுதுபோக்கு செய்ய அனைத்து வசதிகளும் உள்ளன. 

இங்கு வாழும் மக்களுக்கு விவசாயம் தான் தொழில். இங்குள்ள மக்கள் விவசாயம் மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.  

இங்குள்ள மக்களுக்கு கார்கள், பங்களாக்கள், பலருக்கு சொந்தமாக ஹெலிகாப்டர்கள் உள்ளன. சொந்தமாக பங்களாவும், கார் வாங்குவதும் இங்கு சகஜம். 

இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இலவச பங்களா, கார் வழங்கப் படுகிறது. 

வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் !

இந்த கிராமத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது வேறு இடத்திற்கு மாறினால், கொடுத்த பங்களாவையும் காரையும் மீண்டும் அரசு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். 

இந்த கிராமத்தில் தங்கினால் கார், பங்களா கிடைக்கும் !

ஜியாங்யின் நகரத்தால் நிர்வகிக்கப்படும் ஹுவாக்ஸி கிராமம், சோசலிச அமைப்பின் கீழ் இயங்குவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் ஆட்சியின் வெற்றியின் அடையாளமாக இந்த கிராமம் விளங்குகிறது. 

இந்த சித்தாந்தம் தான் ஒரு ஏழை கிராமத்தை பணக்கார கிராமமாக மாற்றியது. சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings