தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !





தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஆங்கிலத்தில் கேஸ்லைட்டிங் என்று சொல்லப்படும் உளவியல் பிரச்சனையை பலரும் சமீப காலமாக பேசி வருகின்றனர். 

தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !
கேஸ்லைட்டிங் என்பது தன்னுடைய சுயநலத்துக்காக மற்றவர்களை மேனிபுலேட் செய்வதைக் குறிக்கிறது. 

இதில் பிறரின் ரியாலிட்டி, நினைவுகள், கண்ணோட்டம், விருப்பு வெறுப்புகள் என்று எல்லாமே கேள்விக் குறியாக்கப்படும். இதில் ஸெல்ப் - கேஸ்லைட்டிங் என்பதும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகலாம். 

ஒருவர் தான் செய்ய கூடிய எல்லா வகையான செயல் பாடுகளுக்கும் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு, தன்னையே காயப்படுத்த கூடியதைக் குறிக்கிறது. 

வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்ப இத படிங்க !

இதில் தனி நபர்கள் தன்னைப் பற்றி எதிர் மறையான நினைக்கிறார்கள் என்றும், தன் நம்பிக்கை யின்மை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மற்றவர்களின் செயல்பாடுகள் காரணமாக தன்னால் இதை செய்ய முடியவில்லை என்றும், நடக்கின்ற பிரச்சினைகளுக்கு தான் தான் காரணம் என்பது போல எண்ணிக் கொண்டு தன்னையே காயப்படுத்திக் கொள்வார்கள்.

மேலும், தனது பண்பு, தன்னிடம் உள்ள சிறிய குறைகளை கூட பெரிதாக எண்ணுதல், அடிக்கடி தனது சொந்த யதார்த்தத்தை சந்தேகிப்பது, தன்னைக் குறைவாக மதிப்பிடுவது போன்றவையும் கேஸ் லைட்டிங்கில் அடங்கும். 

நீங்கள் ஸெல்ப் - கேஸ்லைட் செய்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள, சிகிச்சை யாளர்கள் கூறும் ஐந்து அறிகுறிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று கருதுவது: 

தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !

உங்களை நீங்கள் ஸெல்ப் - கேஸ்லைட்டிங் செய்கிறீர்கள் என்பதை அறிவதற்கான முதல் அறிகுறி இது தான். 

அதாவது, உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் நீங்கள் திட்டமிட்ட படி நடக்காத போது அல்லது அந்த சூழ்நிலைகளால் யாராவது பாதிக்கப் பட்டால், 

அவை அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் என்று உங்கள் மீது நீங்கள் பழி சுமத்துவீர்கள்.

உருளைக்கிழங்கு முட்டை கறி செய்வது எப்படி?

சுய பேச்சு மற்றும் முட்டாள் என குறிப்பிடுவது: 

மற்றவர்களால் தொடர்ச்சியாக நீங்கள் கேஸ்லைட் செய்த பிறகு, நீங்கள் அவர்களின் கருத்துக்களை உள்வாங்க முனைகிறீர்கள். 

மேலும், நீங்கள் பயனற்ற வராகவும், அனைவருக்கும் பாரமாக இருப்பதாகவும் நினைக்கத் தொடங்குகிறீர்கள். 

அத்துடன், எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்திலும், நீங்கள் செய்தது தான் தவறு என்று எண்ணி நீங்களே உங்களை முட்டாளாக கருதி கொள்வது இந்த பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது.

எல்லா நேரத்திலும் மன்னிப்பு கேட்பது: 

தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !

பொதுவாக ஒருவர் உண்மையாக தவறு செய்து விட்டால் அதற்காக வருந்துவது என்பது ஒரு நல்ல பழக்கம். 

இருப்பினும், செய்யாத விஷயத்தால் ஏற்பட கூடிய பாதிப்புக்கு நீங்கள் தான் காரணம் என்று எண்ணி எல்லா நேரங்களிலும் மன்னிப்பு கேட்பது தவறு. 

எனவே, நீங்கள் பொறுப்பேற்காத செயலுக்காக நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும் போது, இது ஒரு கேஸ் லைட்டிங் பிரச்சனையின் அறிகுறியாக கருதப் படுகிறது.

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் செய்வது எப்படி?

உங்கள் திறன்களை குறைத்து மதிப்பிடுதல்: 

நீங்கள் எவ்வளவு திறமை சாலியாக இருந்தாலும், உங்களுக்கு எந்தத் திறமையும் இல்லை யென்றாலும், நீங்கள் திறமையற்றவர் என்றும் நினைப்பது 

உங்களது தன்னம்பிக்கையைக் குறைப்பதுடன், உங்களை நீங்களே மனதளவில் காயப்படுத்தி கொள்ளும் பாதிப்புக்கு உட்படுத்துகிறது என்று சிகிச்சையாளர் ரமணி குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் சாதனைகளை குறைத்து கொள்வது: 

தானே குறை சொல்லி கொள்ளும் நபரா? தெரிஞ்சுக்கோங்க !

இது பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மையுடன் குழப்பி கொள்கிறோம். இருப்பினும், சிகிச்சையாளர் ரமணி கூறுகையில், ஒருவர் தான் செய்கிற பெரிய சாதனைகளை கூட மதிப்பற்றதாக எண்ணி கொள்வது, 
மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு செய்வது எப்படி?

அவற்றில் குறைகளை கண்டுபிடிப்பதும், தன்னால் சாதிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இந்த மனநல பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக குறிப்பிடுகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)