திருமணத்துக்கு முன் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்... ருபெல்லா தடுப்பூசி !

0

நல்ல விஷயங்களை எதிர் நோக்கியிருக்கும் ஒவ்வொரு காலங்களிலும் அது குறித்த விழிப்புணர்வும் போதுமானதாக இருக்க வேண்டும். 

திருமணத்துக்கு முன் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்... ருபெல்லா தடுப்பூசி !

குறிப்பாக ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில், அதிலும் பெண் பிள்ளைகள் ஆரோக்கியம் குறித்து சொல்ல வேண்டியதில்லை. 

பெண்களுக்கே உரிய மாதவிடாய் காலம், கர்ப்பக்காலம், பிரசவகாலம், மெனோபாஸ் காலம் வரை பல நேரங்களிலும் தங்கள் உடலில் இருக்கும் சத்துகளை இழக்க நேரிடுகிறது. 

இதை ஈடு செய்வது ஒரு புறம் என்றால் வேறு எந்தவிதமான நோய்த்தொற்றும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருப்பதும் கூட அவசியமானது. 

அந்த வகையில் இருபாலரை தாக்கக் கூடிய நோய்கள் பெண்களையும் பாதிக்கும் போது சமயங்களில் விபரீதங்களையும் உண்டாக்கி விடுகிறது. 

அப்படியான தீவிர பாதிப்பை உண்டாக்கும் நோய்களில் ஒன்று ருபெல்லா. இது குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆண்களால் பால் கொடுக்க முடியுமா? மார்பகங்களை பற்றி உண்மைகள் !

ருபெல்லா என்னும் ஜெர்மன் தட்டம்மை

வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய நோய் இது. ஜெர்மன் தட்டம்மை என்று அழைக்கப்படும் இது குழந்தைகள், பதின் பருவத்தினர், 

கர்ப்பிணிகள், ஆண்கள் என்று அனைவரையும் தாக்க கூடியது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் குழந்தைகள் ரூபெல்லா நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.

இந்நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் வரையே இருக்கும். வைரஸ் தொற்று என்றாலும் கூட மூன்று நாட்களுக்கு மேல் இவை நீடிக்காது. 

அதோடு ருபெல்லா தொற்று ஆபத்திலாத நோய் என்றாலும், சிறு வயது குழந்தைகளுக்கு சிறிதளவு பாதிப்பை உண்டாக்கும். 

கர்ப்பிணிகளுக்கு அதிகபடியான ஆபத்து அதிலும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம்

திருமணத்துக்கு முன் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்... ருபெல்லா தடுப்பூசி !
பின் தங்கிய நாடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் அம்மை நோய்களில் இந்த ருபெல்லா தட்டம்மையும் ஓன்று. ருபெல்லா என்னும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்த நோய் வருகிறது.

இந்த தொற்று பாதித்தவரின் மூக்கு சளியில் இந்த கிருமி வசிக்கும். பாதித்தவர் தும்மும் போதும், இருமும் போதும் அருகில் இருப்பவருக்கு பரவக் கூடியது என்பதும் கவனிக்க வேண்டியது. 

இந்நோய் தொற்றுக்கு இருப்பவர்களை தனிமைப் படுத்தி வைப்பதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

இடுப்புச் சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள் !

அறிகுறிகள்

காய்ச்சல் மிதமானதாகத் தான் இருக்கும். உடல் சோர்வை நன்றாக உணரமுடியும். வாந்தியும் குமட்டலும் இருக்கும். பசியின்மை பிரச்சனையும் அதிகமாக இருக்கும். சருமங்களில் நிறங்கள் சிவந்து காணப்படும். 

கர்ப்பிணிகள் என்றால் காதோரங்களில் மடல்கள் சிவந்திருக்கும். குழந்தைகளுக்கு சருமங்களில் சிறு தடிப்புகளும், சிறு சிறு கொப்புளங்களும் கூட வருவதற்கு வாய்ப்புண்டு.

பின்னர் படிப்படியாக முகம், மார்பு, நெற்றி, வயிறு என்று உடல் முழுவதும் பரவும். கழுத்து, தொடையில் நெறிகட்டுவதையும் பார்க்கலாம். 

சிலருக்கு எலும்பு மூட்டுகளில் வலியையும் உண்டாக்கும். ஆபத்தை உண்டாக்காத நோய் என்றாலும் கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு மட்டும் ஆபத்தை விளைவிக்கும்.

சிகிச்சை

திருமணத்துக்கு முன் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்... ருபெல்லா தடுப்பூசி !
ருபெல்லா தொற்றை உருவாக்கும் நோய் என்பதால் இந்நோய் கண்டறிந்தவுடன் நோய் தொற்றுக்கு உள்ளானவரை தனிமைப்படுத்த வேண்டும். 

குறைந்தது ஒரு மாதங்கள் வரை அவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். உணவிலும் மென்மையான உணவுகள் அதோடு அதிகளவு திரவ ஆகாரங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்.

பெண்கள் கர்ப்பக்காலத்தில் இந்த தொற்றை சந்தித்தால் குறீப்பாக முதல் ட்ரைமெஸ்டர் என்றால் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. 

வெகு சில பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் இந்த ருபெல்லா கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.

முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேற்ற மஞ்சள் ஆவி பிடிங்க !

​யாருக்கு ஆபத்து

வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் இவை அதிகப்படியான ஆபத்தை உண்டாக்கும். கருச்சிதைவு முதல் கருவின் இதயம், மூளை, கேட்கும் திறன், பார்வை பாதிப்பு வரை உண்டாக்கும். 

பிறவியிலேயெ குழண்டைக்கு விழித்திரையில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் குழந்தையின் பார்வைத் திறன் குறையும்.

இவை காதுமடல்களில் இருக்கும் நரம்புகளை தாக்குவதால் குழந்தைக்கு கேட்கும் திறன் இருக்காது. முதல் ட்ரைமெஸ்டராக இருந்தால் கருச்சிதைவு உண்டாகவும் வாய்ப்புண்டு. 

கர்ப்பிணிக்கு குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது போன்ற பிரச்சனைகளையும் கர்ப்பிணிகள் சந்திக்க நேரிடும்.

​தடுக்க முடியுமா?

வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப இந்த நோய்க்கும் தடுப்பூசிகள் உண்டு. சிறுவயதிலேயே மருத்துவர்கள் எம் எம் ஆர், எம்.ஆர் தடுப்பூசி போடுவார்கள். 

இந்த பருவத்தில் போடத் தவறியவர்கள் 11 வயதிலிருந்து 13 வயதுக்குள் போட்டு கொள்ளலாம். இருபாலருக்கும் அவசியம் என்றாலும் கூடுதலாக பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாதுகாப்பானது. 

பெண் பிள்ளைகள் 12 வயதில் இருந்து திருமணத்துக்கு முன்பு போட்டு கொள்ள வேண்டும். அப்படியும் தவறியவர்கள் திருமணத்துக்கு பின்பு கருத்தரிப்பதற்கு முன்பு இந்த தடுப்பூசியை போட வேண்டும்.

திருமணத்துக்கு முன் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்... ருபெல்லா தடுப்பூசி !
இந்த ஊசி போட்ட மூன்று மாதங்களில் கருத்தரிக்க கூடாது. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே போட்டால் போதுமானது. 

உங்களுக்கு சிறுவயதில் இந்த தடுப்பூசி போட்டது நினைவில்லை யென்றாலும் அதற்குரிய பரிசோதனையான ஐஜி.எம். ஆன்டி பாடி செய்து கண்டறிந்து விடலாம்.

ருபெல்லா அச்சமே தேவையில்லை. பெண்களுக்குமே. ஆனால் துரதிஷ்ட வசமாக கர்ப்பக் காலத்தில் இந்நோய் தாக்கினால் உண்டாகும் விளைவு மோசமாக இருக்கும். 

பூனை குறுக்கே போனால் போக கூடாது என்பதற்கு அர்த்தம் தெரியுமா?

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் இது குறித்து உடனடியாக உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள். இப்போது தெரிகிறதா பெண் குழந்தைகளுக்கு இந்த நோய்க்கு தடுப்பூசி கொடுக்க வேண்டியதன் முக்கியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)