செல்போன் வெடித்து 8-வயது சிறுமி பலி.. ரெட்மி விளக்கம் !

0

கேரள மாநிலம் திருச்சூரில் ரெட்மி போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்த சிறுமி, செல்போன் வெடித்து பலியானது இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரெட்மி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

செல்போன் வெடித்து 8-வயது சிறுமி பலி.. ரெட்மி விளக்கம் !

செல்போன் பயன்பாடு உலகம் முழுவதும் பெருகி விட்டது. அதிலும் இந்தியாவில் இதைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. 

வீட்டிற்கு ஒரு போன் இருப்பதே அரிதாக காணப்பட்ட காலம் மாறி இன்று ஆளுக்கு ஒரு செல்போன் என மாறி விட்டது. 

அதிலும் ஸ்மார்ட் போன் வருகைக்கு பிறகு செல்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப் போனால், செல்போனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். 

வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட செல்போன்கள், ஸமார்ட் போன்கள் வருகைக்கு பிறகு பணம் அனுப்புவதில் தொடங்கி, வாகனம் புக் செய்வது வரை மக்களின் அனைத்து தொழில்நுட்ப பயன் பாட்டிற்குமான கருவியாக மாறிப்போனது.

நேரம் போகவில்லை என்றால் வீடியோ கேம் விளையாடுவது,... வீடியோக்கள் பார்ப்பது என நேரத்தை செலவிடவும் செல்போன்களை பயன்படுத்து கின்றனர். 

அதிலும் குழந்தைகள் கூட செல்போனைக் கண்டால் தற்போது அழுகையை நிறுத்தி விடுகின்றன. 

இதனால் குழந்தையை சமாதானப்படுத்த பலரும் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன்களை கையில் கொடுத்து விளையாட விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கவனமும் சிதற வாய்ப்புள்ளது.

இது ஒரு பக்கம் என்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்போன் வெடித்து சிதறியதில் 8-வயது சிறுமி உயிரிழந்த சோகமும் நடைபெற்றது. 

கேரளாவில் திருச்சூர் மாவட்டம் திருவில்லா அருகே உள்ள பட்டிபரம்பு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் 8 வயது மகள் ஆதித்யா ஸ்ரீ . 

அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா ஸ்ரீ தனது தந்தை செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் தீக்காயம் அடைந்த சிறுமியை பெற்றோர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிசை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஆதித்யா ஸ்ரீ உயிரிழந்தாள். செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுதி ஆதித்யா ஸ்ரீ, ரெட்மி நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து ரெட்மி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜியோமி தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. 

செல்போன் வெடித்து 8-வயது சிறுமி பலி.. ரெட்மி விளக்கம் !

ஜியோமி நிறுவனம் கூறுகையில்,  வாடிக்கை யாளர்களின் பாதுகாப்புத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது போன்ற விவகாரங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வோம்.

இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். சாத்தியமான வழிகளில் அவர்களுக்கு உதவ முடியும் என நம்புகிறோம். 

வெடித்தது ரெட்மி போன் என்று சில தகவல்கள் வெளியாகின்றன. எனினும் இது உறுதியாக வில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். 

இந்த சம்பவத்தின் உண்மை காரணம் குறித்து கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம். தேவையான வகையில் அவர்களுக்கு ஆதரவு அளிபோம் என்று தெரிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)